அண்ணா : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30-க்கு ஒளிபரப்பப்படும் சீரியல் தான் “அண்ணா”. நம்ம இல்லத்தரசிகள் ‘ஆ’ன்னு வாயை பொளந்துட்டு பாக்கிற சீரியல்களில் இதுவும் ஒன்று. TRP ரேட்டிங்கிலும் ஒரு இடத்தை பிடித்துள்ளது
குடும்ப உறவுகள், தாய்மை, சகோதர அன்பு, சதிகள், உண்மைகள் என அனைத்தும் கலந்து ஒவ்வொரு நாளும் சுவாரசிய கட்டங்களுடன் நகர்கிறது. தினமும் பிரசனைகளை சந்திக்கும் மாயா. இப்படி சாதாரண குடும்ப வாழ்க்கையுடன் தொடர்புடையதால் இந்த சீரியல் மக்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.
வெங்கடேஷ் மனதில் சந்தேகம்..
வெங்கடேஷ் தனது குடும்பத்தில் இருக்கும் பிரச்சினையை விட மீனாவின் நடத்தையில் தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறான். ” இவள் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறால்? என்னிடம் எதையாவது மறைக்கிறாளா? என்ற குழப்பம் அவன் மனதை வந்தடைகிறது. சமீபத்தில் அவள் நடந்து கொள்ளும் விதம் அவள் பேசும் விதம் அனைத்துமே வித்தியாசமாக தோன்றுகிறது.
மீனாவுக்கு எதிரான திட்டம்..
மாயா அம்மா வீட்டில் எல்லாமே தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். ஆனால் மீனா வீட்டிற்குள் நுழைந்ததுமே அவளுடைய கட்டுப்பாடுக்கள் சில இடங்களில் முறியடிக்கப்படுகிறது. தன்னுடைய தந்திரத்தை மீனா நிச்சயம் முறியடிக்கப் போகிறாள் என்ற பயம் மாயாவுக்கு வருகிறது. ஆனால் அவள் திட்டம் தீட்டுவதை கைவிடவில்லை. ஒரு பயங்கரமான பிளான் வைத்திருக்கிறாள் மாயா.
“அவளுக்கு எல்லாம் நம்ம வீட்ல மரியாதை கிடைக்கக் கூடாது” இதுதான் மாயாவின் முழு மன எண்ண ஓட்டமாகவே இருக்கிறது. திட்டத்திற்கு முதல் படியாக என்ன பண்ணலாம். இதை தான் மாயா முதலில் யோசிக்கிறாள்.
மாய முதலில் பூர்ணாவை குறி வைத்து பேசுகிறாள். ஏனென்றால் அவள் எதையும் எளிதில் நம்பி விடுவதால் அவளுக்கு தூண்டில் போடுகிறாள். அவளிடம் சென்று மீனாவை பற்றி சந்தேகத்தை தூண்டி விடுகிறாள். அதே நேரத்தில் வெங்கடேஷின் சந்தேகத்தை மேலும் அதிகரிக்க மீனாவை சிக்கலில் தள்ளப் பார்க்கிறாள் மாயா.
மாயாவின் சதித்திட்டம் வெற்றியடையுமா? சதித்திட்டத்தை முறியடிப்பாளா மீனா? வெங்கடேஷின் சந்தேகம் நீங்குமா? என பல்வேறு கேள்விகளுக்கு நடுவில் அண்ணா சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. மீனா எப்படி மாயாவின் சதித்திட்டத்தை முறியடிப்பாள் என்பதை அடுத்த எபிசோடில் காண்போம்.