தனுஷுக்கு ஓடிடி கொடுக்கும் நெருக்கடி.. குபேரா படம் போல் ஏற்பட்ட சிக்கல்

Dhanush : தனுஷின் குபேரா படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சமயத்தில் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க தான் இயக்குனர் முடிவு செய்திருந்தாராம். ஆனால் ஒடிடி நிறுவனத்தின் நெருக்கடியால் படத்தை சீக்கிரமாக வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அதேபோல் ஒடிடி நிறுவனத்தால் இப்போது மீண்டும் தனுஷ் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இது அவரது 54ஆவது படமாகும்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. வேல்ஸ் நிறுவனம் மூலம் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக மமீதா பைஜு நடிக்க இருக்கிறார். படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கி விட்டது.

ஒடிடி நிறுவனத்தால் தனுஷுக்கு ஏற்பட்ட சிக்கல்

ஆனால் இப்போதே இந்த படத்தை ஓடிடி நிறுவனம் வாங்கிவிட்டதாம். இந்த சூழலில் படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில் இருக்குமாறு இந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏனென்றால் அப்போதுதான் எல்லா மொழிகளிலும் வெளியிட ஏதுவாக இருக்கும்.

சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் பான் இந்தியா மொழி படமாக வெளியாகி வருகிறது. இதனால் எல்லா மொழிகளிலும் பரிச்சயமான நபர்களை படங்களில் நடிக்க வைப்பதை யுக்தியாக கையாண்ட வருகிறார்கள். அந்த வகையில் டைட்டிலும் ஆங்கிலத்தில் இருந்தால் எல்லா மக்களுக்கும் சென்றடையும் என்று ஓடிடி நிறுவனம் கூறியிருக்கிறது.

இதனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குனரிடம் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆகையால் தனுஷின் அடுத்த படம் ஆங்கில டைட்டிலை வரும் என எதிர்பார்க்கலாம். மேலும் விரைவில் தனுஷின் இட்லி கடை படம் வெளியாக இருக்கிறது.