Oho Enthan Baby Movie Review: கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்துள்ள ஓஹோ எந்தன் பேபி இன்று வெளியாகி இருக்கிறது. விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அவருடன் இணைந்து மிதிலா பாஸ்கர், மிஷ்கின், கருணாகரன் என பலர் நடித்துள்ளனர். அமீர்கான் இப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறதா என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.
இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் ஹீரோ ருத்ரா விஷ்ணு விஷாலிடம் கதை சொல்ல செல்கிறார். ஆனால் அவர் சொல்லும் கதை பிடிக்காததால் காதல் கதை வேண்டும் என கேட்கிறார் விஷ்ணு.
ஓஹோ எந்தன் பேபி விமர்சனம்
உடனே ஹீரோ தன்னுடைய கதையை அவருக்கு சொல்கிறார். அது பிடித்து போக உடனே நடிக்க சம்மதிக்கிறார் விஷ்ணு விஷால். ஆனால் அதில் ஒரு சிக்கல் வருகிறது. அதை ஹீரோ எப்படி சமாளித்தார்? அவருடைய இயக்குனர் கனவு என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படம்.
தற்போதைய காலகட்டத்தில் இளசுகளின் காதல் எப்படி இருக்கிறது என்பதை இப்படம் காட்டி இருக்கிறது. ஈகோ புரிதல் இல்லாதது என நிஜத்தில் நடப்பதை காட்டியுள்ளனர். அதனால் காதல் உடைந்து போவதையும் அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
இந்த திரைக்கதைக்கு பின்னணி இசை பாடல்கள் துணையாக இருக்கிறது. இதில் ஹீரோ ருத்ரா தன்னுடைய கேரக்டரை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் அவருடைய நடிப்பு இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டும் என நினைக்க வைக்கிறது.
ஆனாலும் குறை சொல்லும் அளவுக்கு அவருடைய நடிப்பு கிடையாது. அதேபோல் தன் தம்பிக்காக நடிகராகவே இதில் கேமியோ ரோல் செய்து இருக்கிறார் விஷ்ணு விஷால். அவருக்கு அடுத்து மிஷ்கின் வரும் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரும் பலம்.
மேலும் திரைக்கதையில் சிறு சிறு குறைகள் தென்படுகிறது. ஒரு சில இடங்களில் சொல்ல வந்ததை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாமோ என தோன்றுகிறது. இருந்தாலும் படம் இளைஞர்கள் பார்க்கும் ரகமாக இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங் : 2.75/5