Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு பாக்யாவின் ஹோட்டலுக்கு வருகிறார். அங்கே தனியாக நின்னு பீல் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது ஆறுதல் சொல்லும் விதமாக ஆகாஷ் வந்து பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் நித்தேஷ் வந்து இவர்களை பற்றி தவறாக பேசி பிரச்சனை பண்ணும் விதமாக இனியாவிடம் மோசமாக நடந்து கொள்கிறார்.
அப்பொழுது பாக்கியா இல்லாததால் இனியாவை காப்பாற்றும் விதமாக செல்வி அக்கா நித்தேஷிடம் பேசுகிறார். ஆனால் நித்திஷ் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் இனியாவின் கையைப் பிடித்து கூட்டிட்டு போவதற்கு தயாராகி விட்டார். அந்த நேரத்தில் பாக்யா வந்ததும் இனியாவை காப்பாற்றி நித்தேஷை திட்டுகிறார். உடனே நித்தீஷ், இனியாவின் கேரக்டரை தவறாக பேசுகிறார்.
பிறகு லோக்கல் கவுன்சிலர் வந்து நித்தேஷை தலையில் அடித்து அந்த இடத்தை விட்டு காலி பண்ணி விடுகிறார். இந்த விஷயத்தை பாக்கியம் வீட்டில் வந்து சொன்னதும் செழியன் எழில் கோபப்பட்டு யாருக்கும் தெரியாமல் நித்தேஷை அடிப்பதற்கு போய் விட்டார்கள். நித்தேஷ் வீட்டு வாசலில் நின்று நித்தேஸ் வரும் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நித்தேஷ் வந்ததும் செழியன் மற்றும் எழில், நித்தேசை அடித்து துவைத்து காயப்படுத்தி விட்டார்கள்.
இதையெல்லாம் பார்த்த சுதாகர் மற்றும் சந்திரிகா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிய நிலையில் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் வந்து சண்டையை தவிர்த்து விடுகிறார்கள். உடனே சந்திரிகா இதற்கு இப்பொழுதே நான் முடிவு கட்ட வேண்டும் என்று கோபமாக பேசிவிட்டு போய்விடுகிறார். அடுத்ததாக இந்த விஷயம் பாக்கிய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை.
வழக்கம் போல் இனியவை ஆபீஸில் விடுவதற்கு கோபி, பாக்கியா வீட்டிற்கு வருகிறார். அப்படி வந்ததும் கோபிக்கு கமிஷனர் ஆபீசில் இருந்து போன் வருகிறது. சந்திரிகா கொடுத்த கம்பளைண்ட் படி கோபி பாக்யா மற்றும் செழியன் எழில் அனைவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி சொல்லிவிடுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு ஏன் என்று தெரியவில்லை, இருந்தாலும் செழியன் மற்றும் எழிலுக்கு அடித்ததினால் தான் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார் என்று தெரிந்து விட்டது.
பிறகு இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட இனியா, கூட நானும் வருகிறேன் என்று அனைவரும் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்கள். அங்கே கோபி நடந்த விஷயத்தை சொல்லி இனி நித்தேஷ், இனியா விஷயத்தில் தலையிடாத படியும் பாக்கியாவின் வாரிசுகளும் நித்திசை எதுவும் பண்ண கூடாது என்பதற்கு ஏற்ற மாதிரி எழுதி வாங்கி வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். அதன் பிறகு சட்டப்படி இனியா விவாகரத்து கேட்பார்.