சூப்பர் ஸ்டாரை டம்மி பண்ணிய நெல்சன்.. சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

Rajini : சினிமாவில் தனது கடும் உழைப்பால், பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வயதாகியும் தனது ஸ்டைலில் சிறிதளவும் குறையாத ஒரே ஆள் சூப்பர் ஸ்டார் தான்.

மும்பையில் வெறும் பஸ் கண்டக்டர் ஆக இருந்த ரஜினி இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் ஒரு ஹீரோவாக உருவெடுத்துள்ளது என்பது சாதாரண விஷயம் அல்ல. 1975 இல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து 15 படங்களில் வில்லனாக நடித்தார்.

பின்பு முள்ளும் மலரும் திரைப்படத்திலிருந்து ஹீரோவாக மாற்றப்பட்ட ரஜினி பல ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்தார். சிவாஜி, எந்திரன் போன்ற திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

வயது என்பது வெறும் நம்பர் மட்டும் தான் என்று உணர்த்தி இருக்கிறார் ரஜினி. 70 வயதை கடந்தும் இன்றும் இளம் தலைமுறை ஹீரோக்களிடம் போட்டி போடும் அளவுக்கு ஹீரோவாக சினிமாவில் வலம் வருகிறார். அவரது ஸ்டைல், நடை, உடை எல்லாம் ரசிகர்களை இன்றும் கட்டிப்போட்டு வைத்துள்ளது.

வசூலில் அள்ளிய படம்..

நெல்சன் இயக்கி ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையில் வெளியாகி பயங்கரமான பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தது. கிட்டத்தட்ட 650 கோடி வசூல் செய்து பட்டையை கிளப்பியது. அதிலும் அனிருத்தின் BGM தலைவர் நடந்து வருகிற சீன் இதெல்லாம் திரையில் பயங்கரமாக இருக்கும்.

ஆனால் தற்போது இந்த திரைப்படம் குறித்து பிஸ்மி பேசியுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

” ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் படுமோசம். சிலை கடத்தல் கும்பலுடன் கைகோர்த்த மகனை சொந்த அப்பனே கொள்வது. அப்பா மட்டும் நல்லவரா என்று பார்த்தால், அவரே ஒவ்வொரு ஜெயில் கைதிகளோடு தான் நட்பே வைத்திருக்கிறார். அது மட்டும் நியாயமா? உங்கள் மகனை நீங்க கொன்னீங்க உங்களை யார் கொல்றது?-ஜெ.பிஸ்மி“.