Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் டிராவல் பிசினஸை ஆரம்பிப்பதற்கு லோன் கேட்டு மீனா சொன்ன நபரை சந்தித்து பேசினார். ஆனால் அங்கே ஏதாவது சொத்து நகை பணம் என்று இருக்கிறவங்க கையெழுத்து போட்டு கொடுத்தால் தான் பணம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள். உடனே ராஜி, தன்னிடம் இருக்கும் நகையை கொடுத்து லோன் வாங்கலாம் என்று கதிரிடம் சொல்கிறார்.
கதிர் அதெல்லாம் வேண்டாம், அப்படி வாங்கி விட்டால் உங்க அப்பா சொன்னபடி நான் நகைக்கு ஆசைப்பட்ட மாதிரி ஆகிவிடும். அதனால் இந்த நினைப்பே உனக்கு இருக்கக் கூடாது, நீயும் வைத்திருக்க வேண்டாம் இப்பொழுது உங்கள் வீட்டில் போய் கொடுத்து விடு என்று சொல்லி விடுகிறார். அடுத்ததாக செந்தில் வேலைக்கு போயிட்டு வந்ததும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.
அப்பொழுது மீனா, பாண்டியனிடம் பேச்சு கொடுக்கும் பொழுது பாண்டியன் சரியாக பேசாமல் மீனாவிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்கிறார். என்னை அப்பா போல் நினைப்பதாக சொன்னியே, உங்க அப்பாட்ட இப்படித்தான் ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை மறைத்து நீயா முடிவு எடுப்பியா என்று கேள்வி கேட்டார். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லி மீனாவை கஷ்டப்படுத்தும் போது இதை பார்த்த செந்தில் மீனாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக மனதில் இருக்கும் பாரத்தை கொட்ட ஆரம்பித்து விட்டார்.
கவர்மெண்ட் வேலைக்காக மட்டும் நான் லஞ்சம் கொடுத்து வேலையில் சேரவில்லை. உங்கள் தொந்தரவு என்னால் தாங்க முடியவில்லை, போகிற இடத்தில் எல்லாம் என்னை அவமானப்படுத்துவதும், கையில் பணம் இல்லாமல் அசிங்கப்படுவதுமாகத் தான் என் நிலைமை இருந்தது. அது மட்டும் இல்லாமல் நான் ஏற்கனவே பணத்தை திருடி கொடுத்து விட்டேன்.
அதன் பின் அத்தையிடம் நீங்கள் அவமானப்பட்டு நிற்க கூடாது என்பதற்காக மீனா லோன் வாங்கி பணத்தை திருப்பி கொடுத்து இருக்கிறார் என்று எல்லா விஷயத்தையும் போட்டு உடைக்கிறார். உடனே பாண்டியன் இதுவரை உனக்கு நான் நல்ல அப்பாவாக தான் இருந்தேன் என்று சொல்லிய பொழுது கோவப்பட்ட செந்தில் நீங்க நல்ல அப்பாவை எனக்கு கிடையாது என்று எல்லோரும் முன்னாடியும் செந்தில் கோபமாக பேசி விடுகிறார்.
இதை கேட்டு நொந்துபோன பாண்டியன் எதுவும் பேச முடியாமல் தடுமாறி விட்டார். கோமதியும் செந்தில் இந்த அளவுக்கு பேசிட்டானே என்று வருத்தத்தில் அமைதியாகிவிட்டார். ஆக மொத்தத்தில் இத்தனை நாளாக மனதிற்குள் பூட்டி வைத்திருந்த எல்லா கஷ்டத்தையும் இன்று வெளிப்படையாக செந்தில் பேசி விட்டார்.