Shruthihasan : கமல்ஹாசன் தனது கடும் முயற்சியால், திறமையான நடிப்பாலும், சினிமாவின் உச்சத்தை தொட்டு உலக நாயகன் கமலஹாசன் என்ற பட்டத்தையும் பெற்றார்.
தந்தை உலக நாயகன் கமலஹாசன், தாயார் நடிப்புக் களஞ்சியம், இப்படி இரண்டு நடிப்பு புலிகளுக்கு பிறந்தவர் தான் ஸ்ருதிஹாசன். பாட்டிலும் நடிப்பிலும் தன் திறமையை வெளிப்படுத்தி கமலஹாசன் மகள் என்று நிரூபித்துக் காட்டியவர் சுருதிஹாசன்.
உலக நாயகனின் மகளாகப் பிறப்பது பாக்கியம் என்றாலும், தனது அப்பா பெயரை பயன்படுத்தாமல் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கியிருக்கிறார் ஸ்ருதி. இவரின் முதல் படமே 2009இல் அதிகாரப்பூர்வம் என்ற ஹிந்தி படத்தில் தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின் தமிழில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய சுருதிஹாசன் சூர்யாவுடன் ஜோடி போட்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 3 படத்தில் நடிப்பு மற்றும் பாட்டு திறமையை வெளிப்படுத்தி மேலும் பிரபலமானார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து அஜித்தின் வேதாளம் திரைப்படத்தில் நடித்தார். ஸ்ருதிஹாசன் விஷாலுடன் நடித்த பூஜை திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், ஹிந்தி மட்டுமில்லாமல் Race gurram, Gobbar Singh போன்ற தெலுங்கு படங்களிலும் கால் பதித்தார்.
ஸ்ருதிஹாசன் சொன்ன விஷயம்..
ஸ்ருதிஹாசன் தற்போது பிரபலங்களை பற்றி பகிர்ந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
“ விஜய் சார் பவன் கல்யாண் சார் இவங்க நல்ல அன்பா நடந்துக்குவாங்க. சினிமாவில் இருந்த இரண்டு பேரும் ஜென்டில்மேன் என்று சொல்லலாம்” இப்படி பவன் கல்யாண் மற்றும் விஜய் பற்றி பேசியது தற்போது வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.