அண்ணா : தங்கையின் மேல் அண்ணன் எப்படி பாசம் வைத்துள்ளார். மற்றும் சுத்தி இருப்பவர்கள் என்ன சதி செய்கிறார்கள், ஒரு சுவாரஸ்யமான சீரியல் தொடர் தான் இந்த “அண்ணா“. தற்போது இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் இதுவும் ஒன்று
வீட்டுக்குள் அமைதி நிலவி வந்தது, ஆனால் தற்போது அதற்கு எதிராக நடக்க ஆரம்பிக்கிறது. விஜயந்தி ஐபிஎஸ் சண்முகத்தை நேரடியாக சந்திக்க வருகிறாள். ஆனால் இது சாதாரண சந்திப்பு அல்ல என்பது தெரிய வருகிறது. நியாயம் எதிர்பார்க்கும் கண்கள் மற்றும் பாசத்தை காப்பாற்ற துடிக்கும் அண்ணன்.
விஜய்ந்தி வீட்டிற்குள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் வீட்டில் இருப்பவர்கள் பார்த்து பதறுகிறார்கள். அடுத்த என்ன நடக்கப்போவது என்ற சஸ்பென்சில் வீட்டினர் அதிர்ச்சியில் உறைகின்றனர். சண்முகம் வெளியில் பார்ப்பதற்கு அமைதியாக இருக்கிறான். அவனுக்குள் உள்ளே தீப்பொறி எழுகிறது.
போலீஸ் விஜயந்தின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க தொடங்குகிறான். “சண்முகம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தங்கைக்கு ஏற்படும் அவமானங்களை தடுக்கும் நோக்கத்தில் இருக்கிறது “. உண்மையை சொன்னால் நம் தங்கை வாழ்க்கை வீணாக போயிடுமோ என்ற எண்ணத்தில் சண்முகம் தயங்கி தயங்கி பேசுகிறான்.
சண்முகத்தை விஜயந்தி கேள்வி கேட்க கேட்க தங்கையின் முகம் தெளிவில்லாமல், நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. விஜயந்தி கேள்வி கேட்க தங்கை மனம் பதறுகிறது. ஒரு குழப்பமான நிலையிலேயே இருக்கிறாள் சண்முகத்தின் தங்கை.
விஜயந்தி உண்மையை கண்டுபிடித்து விடுவாரா? அல்லது சண்முகம் உண்மையை சொல்லி விடுவானா? என்பதில் நகர்கிறது அடுத்த கட்ட கதை திருப்பம். தற்போது சூடு பிடித்திருக்கும் இந்த தொடரின் TRP ரேட்டிங் அதிகமாியுள்ளது.