logesh kanagaraj : லோகேஷ் கனகராஜ் அவர்கள் தமிழ் திரையுலகத்தில் உள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர். குறிப்பிட்ட சில படங்களை இவர் இயக்கத்தை வெளியாகி இருந்தாலும், அந்த சில படங்களும் இவருக்கு வெற்றிவாகை சூடியுள்ளன.
இவர் குறிப்பிட்ட சில படங்களே இயக்கி வெளியிட்டு இருந்தாலும், இவருக்கேனே தனி யூனிவெர்ஸ்சையே உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகம் 1 மற்றும் பாகம் 2 என்று அல்லாமல், புதுவித சினிமா யுக்திகளை கையாண்டு சினிமாவில் கலக்கி கொண்டுள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளிவந்து நடிகர் விஜய் அவர்கள் நடித்த லியோ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அனைவரும் அந்த படத்தை ரசிக்க வைத்தது. இப்போ புது விதமாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. பிரச்சினை என்பதுடன் உரிமையாக கேட்டுள்ளார் என்றே கூறலாம்.
லோகேஷ் மீது செம கடுப்பில் உள்ள லியோ வில்லன்..
லியோ படத்தின் வில்லன் ரோலில் நடித்த சஞ்சய் தத் அவர்கள் தற்போது அளித்த நேர்காணல் ஒன்றில். நான் லோகேஷ் மீது கோவத்தில் உள்ளேன் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அதாவது லோகேஷ் அவர்கள் எனது திறமையை லியோ படத்தில் பயன்படுத்தவில்லை. எனக்கு பெரிதாக கதாபாத்திரம் கொடுக்கவில்லை என்னை சரியாக பயன்படுத்தவில்லை அதனால் நன் அவர் மீது கோபமாக இருகிறேன் என ஜாலியாக ஒரு பட விழாவில் பேசியுள்ளார்.
இவ்வாறு இவர் ஜாலியாக லோகேஷ் கனகராஜ் அவர்களை வேணுமென்று வம்புளுத்துள்ளார். இவ்வாறு ஜாலியான பேச்சும் அவ்வப்போது பிசியாக ஓடிக்கொண்டிருக்கும் சினிமா உலகத்திற்கு தேவை என கருதப்படுகிறது.