டிஆர்பி ரேட்டிங்கில் சொதப்பும் விஜய் டிவியின் பேவரைட் சீரியல்.. முதல் இடத்தை தக்க வைத்த ஆட்டநாயகன்

Vijay Tv Serial: சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் உள்ள சீரியல்கள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியும் கிட்டத்தட்ட 14 சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அத்துடன் இன்னும் புது சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது.

அப்படி இருக்கும் பொழுது மக்களின் ஃபேவரிட் சீரியலாக கொண்டாடப்படும் ஒரு சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சொதப்பிக்கொண்டு வருகிறது. அதாவது இந்த வாரம் வெளிவந்த தகவலின் படி 7.85 புள்ளிகளை பெற்று வழக்கம்போல் முதலிடத்தில் சிறகடிக்கும் ஆசை சீரியல் இருக்கிறது.

இந்த சீரியல் தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. மக்களின் பேவரைட் சீரியலாக எத்தனை சீரியல் இருந்தாலும் முதலிடத்தை விட்டுக் கொடுக்காமல் ஆட்டநாயகனாக முத்து ஜெய்த்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக குடும்பங்கள் கொண்டாடும் கதையாக அய்யனார் துணை சீரியல் 7.43 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் 6.40 புள்ளிகளை பெற்று பாண்டியன் ஸ்டோர் சீரியல் இடம் பிடித்திருக்கிறது. தொடர்ந்து இந்த மூன்று சீரியல்கள் தான் பல மாதங்களாக இதே வரிசையில் தக்கவைத்துக் கொண்டு வருகிறது. அடுத்ததாக சின்ன மருமகள் சீரியல் கதை பெருசாக சொல்லும்படி இல்லாமல் இருந்தாலும் பிரைம் டைமங்கில் ஒளிபரப்புவதால் 5.50 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

மேலும் மக்களின் பேவரைட் சீரியல் என்று மக்கள் தூக்கி கொண்டாடும் மகாநதி சீரியலை மக்கள் விரும்பி பார்த்தாலும் தொடர்ந்து முன்னேற முடியாமல் ஐந்தாவது இடத்திலே இருந்து சொதப்பிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் 4.90 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் தான் இருக்கிறது.