Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், கார்த்திகாவின் கல்யாணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத சேரன் மனதளவில் நொந்து போய்விட்டார். தன்னுடைய பாரத்தை யாரிடம் சொல்ல என்று தெரியாமல் தவித்து வந்த சேரனுக்கு நிலா, என்ன பிரச்சனை என்று கேட்ட பொழுது மொத்தத்தையும் கொட்டி தீர்க்கும் விதமாக அழுது மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்தி விட்டார்.
ஒருவர் தன்னுடன் இருக்கும் பொழுது அவர்களுடைய அருமை தெரியாது, அவர்கள் நமக்கு இனி கிடையாது என்று சொல்லும் பொழுது தான் அவர்களுடைய அருமை புரியும். அப்படித்தான் எனக்கு இப்பொழுது கார்த்திகா பிரிவு ரொம்பவே வருத்தத்தை கொடுக்கிறது என்று கார்த்திகா மீது வைத்திருந்த காதலை பற்றி சேரன், நிலாவிடம் சொல்லி பீல் பண்ணி பேசுகிறார்.
சேரனின் வருத்தத்தை புரிந்து கொண்ட நிலா என்ன சொல்வது என்று தெரியாமல் சேரன் மனதில் இருக்கும் பாரத்தை கொட்டும் வரை பொறுமையாக கேட்டுக் கொண்டார். இருந்தாலும் நிலாவின் மனசும் சங்கடம் ஆகிவிட்டது, உடனே நிலாவுக்கு சோழன் ஞாபகம் வந்துவிட்டது. அதனால் சோழனுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி எனக்கு யாரிடமாவது பேச வேண்டும் என்று தோணுச்சு அதான் உங்க ஞாபகம் வந்துச்சு என சோழனிடம் சொல்கிறார்.
உடனே சோழன், நிலாவை சமாதானப்படுத்தி விட்டு நான் இப்பொழுதே வீட்டுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்கிறார். அதற்கு நிலா அதெல்லாம் ஒன்னும் அவசரம் இல்லை நீங்கள் வேலையை முடித்துவிட்டு வாங்க. எனக்கு உங்களிடம் பேச வேண்டும் என்று தோணுச்சு அதான் போன் பண்ணினேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார்.
பிறகு சோழனும் பாண்டியனும் வீட்டிற்கு வரும் பொழுது அண்ணனின் வருத்தம் எனக்கு ரொம்பவே கஷ்டத்தை கொடுத்தாலும் நிலா மனசில் நான் ஒரு இடம் பிடித்திருக்கிறேன். அவளுக்கு ஒரு கஷ்டம் என்றதும் எனக்கு போன் பண்ணனும் என்று தோணுதே எனக்கு மிகப்பெரிய சந்தோசம் என்று சோழன், பாண்டியனிடம் சந்தோசமாக சொல்லிக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இப்போதைக்கு சேரனுக்கு கல்யாணம் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் அதே நேரத்தில் பாண்டியன் வானதி காதல் அதிகரித்துக் கொண்டே வருவதால் இவர்களுடைய ரூட்டு தான் அடுத்த கிளியராக போகிறது. அந்த வகையில் இவர்களுடைய கல்யாணம் நடந்த பிறகு தான் சேரனுக்கு கல்யாணம் நடக்கும்.