ஹெச் வினோத்தை ரிஜெக்ட் செய்த தலைவர்.. ஜனநாயகனுக்கு அடுத்து என்ன.?

Rajini-H Vinoth: ஹெச் வினோத் தற்போது விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார். அடுத்த பொங்கலுக்கு இப்படம் வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் அதற்கு முன்பே எச் வினோத் ரஜினி படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல்கள் வந்தது. ஜெயிலர் 2 படத்தை முடித்த கையோடு அடுத்த படத்தில் நடிக்க தலைவர் தயாராக இருக்கிறார்.

அதனால் தெலுங்கு இயக்குனர் விவேக் ஆத்ரேயா, ஹெச் வினோத் ஆகியோரிடம் கதை கேட்டுள்ளதாக கூறப்பட்டது. அதில் வினோத் படத்தை இயக்கும் வாய்ப்புகள் அதிகம் என சினிமா விமர்சகர்களும் கூறினார்கள்.

ஆனால் இப்போது அவர் அந்த படத்தை இயக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் ஏன் தலைவர் அவருடைய கதையை ரிஜெக்ட் செய்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

ஜனநாயகனுக்கு அடுத்து என்ன.?

அப்படி என்றால் வினோத் அடுத்ததாக யாரை இயக்கப் போகிறார் என்ற பெரும் கேள்வி இருக்கிறது. ஏற்கனவே தனுஷ் கூட்டணியில் ஒரு படம் இணைய போவது உறுதியாக இருக்கிறது.

ஆனால் உடனே இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்கப்படாது. ஏனென்றால் தனுஷ் கைவசம் தற்போது மூன்று படங்கள் அடுத்தடுத்து இருக்கிறது. அந்த படங்களை முடித்துவிட்டு வினோத் உடன் அவர் நடிக்க இருக்கிறார்.

அதன் பிறகு தான் வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை 2 உருவாகும் என்கின்றனர். ஆனால் வினோத் படத்திற்கு வருவதற்கு இடையில் மூன்று படங்கள் இருக்கிறது. அப்படி என்றால் ஜனநாயகனுக்கு பிறகு என்ன என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.