அந்த சம்பவம் என்னன்னு சொல்லிட்டு போங்கடா.. யாருக்கு தெரியும் வழக்கமா சொல்றது தான, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: இன்று சோசியல் மீடியா முழுவதும் விஜய் தொண்டர்களின் அலப்பறை தான் அதிகமாக இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் இப்போது அதிக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை அஜித்குமார் மரணம் தொடர்பாக போராட்டம் நடத்தப் போவதாக ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் பரந்தூர் மக்கள் விஜய் கூப்பிட்டால் போராட்டத்திற்கு தயார் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் இன்று சம்பவம் உறுதி என காலையிலிருந்து தொண்டர்கள் அலப்பறை கொடுத்து வருகின்றனர். அப்படி என்னதான்டா சம்பவம் சொல்லிட்டு போங்கடான்னு கட்சியில் இருப்பவர்களே பொங்கி விட்டனர்.

ஆனால் அதற்கு மட்டும் யாரும் பதில் சொல்லவில்லை. எல்லாரும் போடுறாங்க நம்மளும் போடுவோம் என ட்வீட் போட்டு வருகின்றனர். உண்மையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெற இருக்கிறது.

அந்த அறிவிப்பை தான் இப்படி ஆளாளுக்கு சம்பவம் சம்பவம் என்று கதறிக்கிட்டு இருக்காங்க. கடந்த வருடம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்பட்டு பெரிய அளவில் கவனிக்கபட்டது. அதை தொடர்ந்து மதுரை மாவட்டத்திற்கு மாநாடு சித்திரை திருவிழாவை மிஞ்சிவிடும்.

எல்லா மீடியாக்களும் எங்கள் பக்கம் தான் என தொண்டர்களும் ரசிகர்களும் பெருமைப்பட்டு வருகின்றனர். அது சம்பந்தப்பட்ட மீம்ஸ் தொகுப்பு உங்களுக்காக.