Kamalhasan : இன்று சினிமாவில் உச்சத்தில் இருக்கும் கமல்ஹாசன் அவர்களின் சம்பளம் கோடிக்கணக்கில் இருந்து வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை விடாமுயற்சியால் தான் கடின உழைப்பால் உச்சத்தில் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இன்று தமிழ் சினிமாவிற்கு நிறைய பெருமைகளும், புகழையும் சம்பாதித்து கொடுத்துகிறார். கமல் சினிமாவில் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்கவைத்திருக்கிறார். தற்போது மேலும் ஆஸ்கர் விருது குழுவிலுருந்து அழைப்பு வந்து மேலும் அவரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அரங்கேற்றம் படத்தில் பணியாற்றிய போது கே பாலச்சந்தர் அவர்கள் கமல்ஹாசன் அவர்களின் காட்சியை நடித்து காண்பித்த போது, அதை அப்படியே பிசிறு தட்டாமல் கமல்ஹாசன் அவர்கள் ஜெராக்ஸ் எடுத்தது போல நடித்திருக்கிறார். இதை பார்த்து பாலச்சந்தர் அவர்கள் கமல்ஹாசனை மேலும் ரசித்திருக்கிறார்.
அன்று சம்பளம் வெறும் 500..
அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் அவர்களிடம் உள்ள பெரிய அவரை மேலும் ஈர்க்கச் செய்திருக்கிறது. பிறகு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் அவர்களை அழைத்து 500 ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறார் பாலச்சந்தர். அதற்கு கமல்ஹாசன் அவர்கள் எனக்கு தெரிந்த அளவில் நான் நன்றாகவே நடித்திருக்கிறேன் ஆனால் 500 ரூபாய் தான் சம்பளம் தருகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பாலச்சந்திரன் அவர்கள் இப்போது இதைப் பெற்றுக் கொள் இந்த தமிழ் சினிமாவில் இதைவிட 100 மடங்காக நீங்கள் சம்பளம் வாங்குவீர்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அன்று பாலச்சந்தர் அவர்கள் கூறியவாறு இன்று நூறு மடங்காக அல்ல லட்சம் மடங்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.
விக்ரம் படம் கொடுத்த வெற்றி மற்றும் இவர் தமிழ் சினிமாவில் தற்போது 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருந்து வருகிறார். அன்று கே பாலச்சந்தர் அவர்கள் சொன்னது சத்தியவாக்கு போல பழித்துள்ளது என்று தற்போது வலைப்பேச்சு அந்தணன் இந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.