சங்கருக்கு விழுந்த 2 பெரிய இடி.. 3 சிறிய அடி

Director : தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான, பிரம்மாண்டமான பெரிய அங்கீகாரம் கொண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். அவர் படம் எப்போதும் பெரிய பட்ஜெட்டாகவும், தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றத்தை எதிர்நோக்கி தான் இருக்கும்.

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்தார். 1993இல் ஜென்டில்மேன் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். அவருடைய படங்கள் எப்போதும் சமூக நீதியை எதிர்த்து குரல் கொடுக்கும் வகையில் தான் இருக்கும். இவரின் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மொழி ரசிகர்களும் இருக்கின்றனர்.

ஜென்டில்மேன் படத்திற்கு பிறகு காதலன், இந்தியன், எந்திரன் போன்ற ஹிட் படங்களை தமிழில் இயக்கினார் ஷங்கர். இவர் பெயரைக் கேட்டாலே தமிழ் சினிமாவவே நடுங்கும். ஒரு படம் எடுத்தால் அது எவ்வளவு பட்ஜெட் என்று யோசிக்க மாட்டார். எப்படி மக்களுக்கு ரீச்சாக்கும் என்பதை யோசித்து தான் படம் எடுப்பார் சங்கர்.

ஹாரர், ரொமான்டிக், ஆக்சன், காதல் என அனைத்து வகையான படங்களை எடுப்பதிலும் கைதேர்ந்தவர். ரஜினிகாந்த், கமலஹாசன், விக்ரம், விஜய் சூர்யா போன்றவர்களை வைத்து படம் எடுத்து பிரபலமாக்கியவர் ஷங்கர். பெரும்பாலும் ஏ ஆர் ரகுமான், அனிருத் இசையமைப்பாளர்களுடன் இணைந்து கலக்கியுள்ளார்.

பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும், சில படங்களில் ஷங்கர் எதிர்பார்த்த மாதிரி படம் வசூல் ஆகவில்லை என்பதுதான் உண்மை. அந்த வரிசையில் 4 திரைப்படங்கள் இருக்கின்றது.இந்த படங்கள் எல்லாமே சினிமாவில் ரீச் தான். ஆனால் வசூலில் கொஞ்சம் இயக்குனர் சங்கரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இவர் இயக்கிய திரைப்படமான பாய்ஸ், ஐ, 2.0, கேம் சேஞ்சர் இந்தத் திரைப்படங்கள் எல்லாம் பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்டது. ஆனால் திரையில் வெளியாகி இவர் எதிர்பார்த்தளவு வசூல் செய்யவில்லை என்பது உண்மை. பிரமாண்ட திரைப்பட இயக்குனருக்கே இந்த நிலைமையா என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.