Vijay: விஜய் இப்போது முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவர் ஆளும் கட்சியை ஓரங்கட்ட வேணும் என தீயாக வேலை செய்து வருகிறார்.
அதன்படி சமீபத்தில் காவல் விசாரணையின் போது மரணம் அடைந்த அஜித் குமாரின் வீட்டிற்கு விஜய் சென்று ஆறுதல் கூறி நிதி உதவியும் செய்தார். அதை அடுத்து இன்று கடந்த 4 ஆண்டுகளில் நடந்த லாக்கப் மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர் சந்திக்கிறார்.
தற்போது 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விஜயை சந்திப்பதற்காக பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் இப்போது செய்தி சேனல்களை ஆக்கிரமித்துள்ளது.
TVK தலைவரின் அடுத்த அஸ்திரம்
அவர்களை சந்திக்கும் விஜய் தேவையான நிதி உதவி செய்வதோடு சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் உதவப்போவதாக செய்திகள் கசிந்துள்ளது. அதேபோல் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டும் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இதனால் நாளைய தினம் ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் இங்கு தான் இருக்கும். இதை அடுத்து மதுரையில் இரண்டாவது மாநாடு ஆகஸ்ட் 3வது வாரத்தில் நடைபெற இருக்கிறது.
இப்படியாக விஜய் அடுத்தடுத்த நகர்வுகளை கவனத்துடன் செய்து கொண்டிருக்கிறார். 2026 தேர்தல் நிச்சயம் அவருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம். பார்க்கலாம் மக்கள் எந்த தலைவனை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என.