தனுஷ் தொடர்ந்து மூன்று வருடங்கள் பிசியாக இருக்கிறார். ஒரு தென்னிந்திய நடிகர் இவ்வளவு பிஸியாக இருப்பது மிகவும் அரிது என கூறுகிறார்கள். இப்பொழுதும் இட்லி கடை, D54 படத்தின் வேலைகளில் தான் முழு மூச்சில் இறங்கியுள்ளார். மகன்களை கூட கவனிக்காமல் படவேலைகளில் மூழ்கியுள்ளார்.
குபேரா படம் முடிந்தவுடன் 15 நாட்கள் ரெஸ்ட் எடுத்துள்ளார் ஆனால் அதற்கு வழி இல்லாமல் இப்பொழுது இட்லி கடை படத்தின் டப்பிங் பேசி வருகிறார். இந்த நாட்களில் மகன்களை கூட்டிக்கொண்டு வெளிநாடு செல்வதாக இருந்த அவர்களுக்கு விசா பிரச்சனை வந்ததால் அனைத்தையும் கேன்சல் செய்து விட்டார்.
இது ஒரு பக்கம் இருக்க அடுத்தடுத்த வேலைகளில் தனுஷ் கவனம் செலுத்திய வருகிறார். அவர் பக்கத்தில் கூட நெருங்க முடியாத அளவிற்கு அவரது லைன் அப் 3 வருடங்கள் விறுவிறுப்பாக போக உள்ளது. ஏற்கனவே தனுஷ் பல வருடங்களுக்கு முன்னால் எச் வினோத் படத்தை வேறு கமிட் பண்ணி வைத்திருக்கிறார்.
தனுஷின் லைன் அப்: போர் தொழில் விக்னேஷ் ராஜாவுடன் D54 படம், அடுத்தபடியாக லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவிற்கு ஒரு படம், இதை முடித்த பிறகு ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி போடுகிறார். இப்படி மூன்று படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.
இன்னும் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி ஐந்து படங்கள் நிலுவையில் இருக்கிறது. அதுபோக ஜனநாயகன்படத்தை முடித்தவுடன் எச் வினோத்திற்கு ஒரு படம் இருக்கிறது. இதற்கிடையில் குபேரா படம் தெலுங்கு மொழியில் சக்க போடு போட்டுள்ளது. அங்கே ஏகப்பட்ட இயக்குனர் இவருக்காக காத்து கிடக்கிறார்கள்.