Suryavamsam 2: விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா என பலர் நடிப்பில் வெளிவந்த சூர்யவம்சம் மாபெரும் வெற்றி பெற்றது. சொல்லப்போனால் தேவயானிக்கு இந்த படம் மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது.
ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து வரவேற்பு கொடுத்தனர். இப்போதும் கூட டிவியில் இந்த படத்தை போட்டால் எந்த வேலையாக இருந்தாலும் ஓரங்கட்டி விட்டு குடும்பமாக பார்க்க அமர்ந்து விடுவார்கள்.
இது இப்போதைய 2k கிட்ஸ் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் நட்சத்திர ஜன்னலில் பாட்டு இப்போது இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம். அதை வைத்து பார்ட் 2 என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டார் சரத்குமார்.
இந்தியன் 2 வாங்குன அடி மறந்திருச்சோ
கடந்த வருடம் கூட இதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். தற்போதைய தகவலின் படி சூப்பர் குட் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது சரத்குமார் தேவயானி ஜோடி மீண்டும் இணைகின்றனர்.
ஜீவா அவர்களின் மகனாக நடிக்கிறார். ஆனால் விக்ரமன் படத்தை இயக்கவில்லை. பிரபு சாலமனின் உதவியாளர் தான் இயக்குகிறார். இந்த செய்தியை கேட்கும் போதே படம் எப்படி இருக்குமோ என தோன்றுகிறது.
ஏனென்றால் கடந்த வருடம் சங்கர் கமல் கூட்டணியில் வெளிவந்த இந்தியன் 2 பலத்த அடி வாங்கியது. பேசாமல் முதல் பாகத்தோடு விட்டிருக்கலாம். இப்ப இந்த அவமானம் தேவையா என சோசியல் மீடியாவில் பல ட்ரோல் கிளம்பியது.
அதை வைத்துப் பார்க்கும்போது சூரிய வம்சம் 2 தப்பிக்குமா இல்லை கலாய்க்கப்படுமா? என்று தெரியவில்லை. ஆனால் இது போன்ற வெற்றி படங்களை அப்படியே விட்டுவிடுவது நல்லது. தேவையில்லாமல் 2ம் எடுத்து முதல் பாகத்தின் பெருமையை குறைக்க வேண்டாம் என்பது ஆடியன்ஸின் எண்ணம்.