மில்க் நடிகையை உருகி உருகி காதலித்த நடிகர்.. திட்டம் போட்டு மகனை வழிக்கு கொண்டு வந்த அப்பா

Gossip: பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் அந்த மூத்த நடிகர் எல்லாவற்றிலும் கரெக்டாக இருப்பார். சினிமா வேறு குடும்பம் வேறு என்பதில் அவர் எப்போதுமே தெளிவுதான்.

அதற்கேற்றார் போல் அவருடைய மகன்களும் அப்பா பேச்சை மீறாத பிள்ளைகள் தான். ஆனால் மூத்த மகன் அப்பா பேச்சையும் மீறி பிடிவாதமாக இருந்து அந்த பிரைட் நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

வெளியில் சாதாரணமாக காட்டிக் கொண்டாலும் அப்பாவுக்கு இதில் பெரிய அளவில் விருப்பம் கிடையாது. எங்கே இளைய மகனும் இந்த மாதிரி ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் அவருக்கு இருந்திருக்கிறது.

திட்டம் போட்டு மகனை வழிக்கு கொண்டு வந்த அப்பா

ஏனென்றால் மில்க் நடிகையுடன் இளைய மகன் நெருக்கம் காட்டும் செய்தி அவர் காதுக்கு வந்திருக்கிறது. உடனே என்ன செய்வது என்று தெரியாமல் அப்போது தமிழ்நாட்டையே தன் கண்ட்ரோலில் வைத்திருந்த பிரபலத்திடம் இது பற்றி சொல்லி இருக்கிறார்.

அவரும் அந்த நடிகரை கூப்பிட்டு அப்பா பேச்சை கேள் தம்பி என தன்மையாக எடுத்து சொல்லி இருக்கிறார். அதன் பிறகு தான் அப்பா சொன்ன பொண்ணை பார்த்து கல்யாணம் செய்து கொண்டாராம் அந்த நடிகர்.

இதனால் மில்க் நடிகை கடும் கோபத்தில் வேறு மொழி பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார். அதன் பிறகு அவர் சமாதானம் அடைந்து நடிகருடன் இன்னொரு படம் நடித்தது எல்லாம் தனி கதை.