தர்பூசணி திவாகர் ஓபன் டாக்.. சூரியின் 20 வருட உழைப்பை கேள்விக்குறி ஆக்கியதா?

Soori : நடிப்பின் மேல் இருக்கும் ஆர்வத்தால், சினிமாவில் ஒரு காமெடியனாக சின்ன ரோலில் அறிமுகமாகியவர் சூரி. ஆனால் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கொண்டாடும் நடிப்பு நாயகனாக உருவெடுத்துள்ளார்.

2009-இல் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் காமெடி நாயகனாக அறிமுகமானார் சூரி. அந்த படத்தில் வரும் பரோட்டா காமெடி தான் இவரை தூக்கி விட்டதே. காமெடி நடிகர் கஞ்சா கருப்பு மாதிரி பானியை பயன்படுத்தி கிராமப்புற படங்களின் காமெடி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தார். இதைத் தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக ஹிட் கொடுத்தார் சூரி.

முக்கியமாக சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரியின் காமெடி கலை கட்டியது. இதைத் தொடர்ந்து இருவரின் காம்போ மீண்டும் “சீமராஜா” படத்தில் அமைந்தது. இப்படி தொடர் படங்களை நடித்து தனக்கென்று ஒரு காமெடி நடிகன் இடத்தை சினிமாவில் தக்க வைத்தார் சூரி.

2023-இல் வெளியான விடுதலை திரைப்படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். ரசிகர்கள் மத்தியில் இவருக்கென ஒரு பெரிய பெயர் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கருடன், கொட்டுக்காலி, விடுதலை 2, மாமன் போன்ற திரைப்படங்களில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று ஒரு பெரிய இடத்தை பிடித்தார்.

பல வருடங்கள் கஷ்டப்பட்டு சினிமாவில் உழைத்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த சூரிக்கு நிறைய பாராட்டு மழை குவிந்தது. ஒரு கட்டத்தில் இயக்குனர் மணிரத்தினமே புகழாரம் சூட்டினார். தற்போது அப்கமிங்கில் சில படங்களை வைத்திருக்கிறார் சூரி.

சூரியப் பற்றி பேசுவது சரியா..?

இந்நிலையில் தர்பூசணி காமெடி மூலம் பேமஸான “தர்பூசணி ஸ்டார்” என்று அழைக்கப்படும் திவாகர் சூரியை பற்றி பேசி உள்ளார்.

“சூரி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது. அவரு கூட என்னை ஒப்பிட வேண்டாம்-திவாகர்”. இதற்கு பத்திரிக்கையாலரின் நெத்தியடி கேள்வி : 10 ரூபாய் தர்பூசணியை வைத்து பேமஸ் ஆனாவன் நீ. ஆனால் சூரி 20 வருஷம் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்திருக்காருன்னு கூறியிருக்கிறார். இந்த விவாதம் பயங்கரமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.