90’s ல நான்தான் “கைதி”.. open talk கொடுத்த அருண்பாண்டியன்

Arunpandiyan : அருண்பாண்டியன் அவர்கள் தமிழ் திரையுலகத்தை சார்ந்த மிகப்பெரும் நடிகர். “ஊமை விழிகள்” என்ற படத்தில் நடித்து அனைவராலும் பிரபலமாக பேசப்பட்டவர். ஒரு கச்சிதமான நடிகர் என்றே கூறலாம்.

ஊமை விழிகள், உரிமைப் போர், ராஜமுத்திரை, அக்கேணம் போன்ற நிறைய திரைப்படங்களை தமிழ் திரையுலகத்திற்கு கொடுத்து இருக்கிறார். இவரது நடிப்பில் ஒரு சீரியஸ்னஸ் தெரியும். அனைவராலும் கவரக்கூடிய வகையில் நடிக்க தெரிந்த ஒரு எதார்த்தமான மனிதர்.

இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளரும் கூட, ஐங்கரன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் இவர் முன்னாள் ராணுவ வீரரும் கூட. இவர் நல்ல அரசியல்வாதியாகவும் அரசியலிலும் பங்கேற்றுள்ளார்.

open talk கொடுத்த அருண்பாண்டியன்..

இவர் தற்போது “பிளாக் சிப்” விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இந்த விழாவில் இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அதாவது லோகேஷ் உங்கள் படம் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் மிகவும் அற்புதமாக உள்ளது.

நீங்கள் 90sகளில் இருந்திருந்தால் நான் உங்கள் படத்தில் பணியாற்றி இருப்பேன் என்றும் கலகலப்பாக பேசியுள்ளார் அருண்பாண்டியன். லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயற்றியதில் மாநகரம், கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள்.

இவர் நடிப்பதாக இருந்தால் இவருக்கு ஏற்ற வகையில் லோகேஷ் கனகராஜ் அவர்களின் எந்த கதாபாத்திரம் பொருந்தும் என்பது மேலும் எதிர்பார்ப்பளிக்கிறது. நடிகர் கார்த்தி நடித்திருக்கும் கைதி படத்தில் உள்ள கேரக்டர், அருண்பாண்டியன் அவர்களுக்கு அப்படியே பொருந்தும் என்பது அனைவராலும் பேசப்படும் கருத்து.