நம்ம சினிமாவில் நின்று பேசும் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் 5 கேரக்டர்கள்.. கரீனா சோப்ராவிடம் மயங்கிய சொக்கநாதன்

Kotta Srinivasa Rao: தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று மரணம் அடைந்திருக்கிறார்.

1975 -ல் ஆந்திர சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் 2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். கிட்டத்தட்ட 25 தமிழ் படங்களில் நடித்த இவருடைய முக்கியமான ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

கோட்டா ஸ்ரீனிவாச ராவின் 5 கேரக்டர்கள்

திருப்பாச்சி: தளபதி விஜய்க்கு கேரியர் பெஸ்ட் திரைப்படம் என்றால் அது திருப்பாச்சி. அதில் சனியன் சகடை என்னும் கேரக்டரில் தான் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் நடித்திருப்பார்.

இவருடைய, முகமும் குரலும் அப்போதைய வில்லன் அசோகனை ஞாபகப்படுத்தியது. எந்த ஒரு சண்டைக் காட்சிகளிலும் தலையிடாமல் தளபதிக்கு தன்னுடைய குரல் மற்றும் கூட்டத்தை வைத்து தண்ணீர் காட்டி இருப்பார் இந்த சனியன் சகடை.

சாமி: சாமி படத்தில் வந்த இந்த பெருமாள் பிச்சை கேரக்டரை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. விக்ரமை தன்னுடைய ஜாதிக்காரர் என கையோடு சேர்த்துக் கொள்வதும், பிறகு அவரின் உண்மை முகம் தெரிந்ததும் வில்லத்தனத்தில் ஆட்டம் காட்டுவதும் என பெருமாள் பிச்சை ஆறு சாமியை படம் முழுக்க கதி கலங்க தான் வைத்தார்.

கோ: ஜீவா மற்றும் அஜ்மல் இயக்கத்தில் வெளியான கோ படத்தில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆளவந்தான் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் இவர் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதற்காக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் போது ஜீவா அதை புகைப்படம் எடுப்பார். அதிலிருந்து தான் படத்தின் கதை தொடங்கும்.

ஆல் இன் ஆல் அழகுராஜா: கார்த்தி மற்றும் சந்தானம் கூட்டணியில் வெளியான முழு நீள நகைச்சுவை படம் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. சனியன் சகடை, பெருமாள் பிச்சை என்ற கேரக்டர்களில் மிரட்டி கொண்டிருந்தார் ஸ்ரீனிவாச ராவ் கரீனா சோப்ரா அழகில் மயங்கி லூட்டி அடிக்கும் சொக்கநாதன் கேரக்டரில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

கொக்கி: கரண் ஹீரோவாக நடித்த கொக்கி படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இருந்தாலும் இது ஸ்ரீனிவாச ராம் ஏற்று நடித்த உப்பிலியப்பன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

சென்னையை மிரட்டிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வில்லன் உப்பிலியப்பன் ஹீரோ கரணின் முகத்தில் முழித்தால் நல்லது நடக்கும் என நம்புகிறார்.

இதனால் அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார், இது கரணுக்கு தொல்லையாக இருக்கிறது. அதன் பிறகு உப்பிலியப்பன் தன்னுடைய மொத்த வில்லத்தனத்தையும் காட்டுவது தான் இதன் கதை.