அட்லீ இயக்கத்தில் கடைசியாக ஷாருக்கானுடன் வெளியான ஜவான் திரைப்படம், தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. ஆனால் வடஇந்தியாவில் அது பெரும் ஹிட்டாகி, உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வரை வசூலித்து, அட்லீயின் பாலிவுட் மார்க்கெட்டை உயர்த்தியது.
இப்போது அவர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் இயக்கவிருக்கிறார். இந்தப் படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக, தென்னக ஹீரோவுடன் அட்லீ மீண்டும் இணைவதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
வில்லனாக ஹாலிவுட் ஸ்டார்
அட்லீ அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில், வில்லனாக வில் ஸ்மித் அல்லது ட்வைன் ஜான்சன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டணி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.
ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் AA22 × A6 திரைப்படத்தில் தாத்தா வேடத்தில் அனில் கபூர் அல்லது பங்கஜ் திரிபாதி போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு இணையாக, பாட்டி வேடத்தில் தீபிகா படுகோன், ஒரு ராஜசீய தோற்றத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்குவார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்
இதில் அல்லு அர்ஜுன் நான்கு விதமான கதாபாத்திரங்களில், முழுக்க முழுக்க பாசிட்டிவ் வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.
தீபிகாவுடன் சேர்ந்து, மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர். இது ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் அல்லது சூப்பர் ஹீரோ ஜானர் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.