Memes: இளையராஜா பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தினால் அவர் உடனே ராயல்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பி விடுவார். இது சிறு பட்ஜெட் படங்களுக்கு பெரிய விளம்பரமாக மாறிவிடுகிறது.

அதனாலயே சிலர் வேண்டுமென்றே ராஜா சார் பாடல்களை பயன்படுத்துவதுண்டு. அதேபோல் பெரிய ஹீரோக்கள் படங்களிலும் இதுதான் நடக்கிறது.

தற்போது இந்த விஷயத்தில் சிக்கி இருப்பவர் வனிதா விஜயகுமார். அவருடைய படத்தில் இளையராஜா பாடல் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டு விட்டதால் தற்போது நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

இது பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் நான் ராஜா சார் வீட்டுக்கு மருமகளா வந்திருக்க வேண்டியவள் என்று கூறி கண்ணீர் விட்டார். இது போதாதா இணையதளத்தில் அவரை ட்ரோல் செய்து பல மீம்ஸ் வரிசை கட்டுகிறது.

உன்கிட்ட போய் ராயல்டி கேட்டேன் பாரு என்ன சொல்லணும். எல்லாம் என் நேரம் டேய் அந்த மான நஷ்ட வழக்கையும் சேர்த்து போடுங்கடா என இளையராஜா சொல்வது போல் மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது.

அதே சமயம் இளையராஜா வீட்டின் மருமகள் என்றால் யாரா இருக்கும் கண்டிப்பா கார்த்திக் ராஜா தான் என்கின்றனர் சிலர். இன்னும் சிலர் ஒரு வேலை பிரேம்ஜியா இருக்குமோ.

இல்ல கண்டிப்பா வெங்கட் பிரபுவா தான் இருக்கும் என கலாய்த்து வருகின்றனர். இப்படி சோசியல் மீடியாவில் வைரலாகும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.