தண்ணி கூட இல்லாம மயங்கி விழுந்துட்டாங்க.. TVK போராட்டக் களத்தில் நடந்தது என்ன, யார் மீது தவறு.?

TVK-Vijay: இன்றைய தினத்தை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். இளைஞர் அஜித்குமார் காவல் மரணத்தில் விஜய் நேரடியாக அவருடைய வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியதோடு நிதி உதவி செய்தார்.

அதற்கு முன்பே இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் சென்ற பிறகு இன்னும் பரபரப்பானது. ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்களை அனைத்து கட்சியினரும் வைத்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 24 காவல் மரணங்கள் நடந்துள்ளது. அவர்களை வைத்து ஒரு சம்பவம் செய்யப் போகிறார் விஜய் என பரபரப்பு செய்திகளும் கசிந்தது. அதன்படி இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் தலைவர் விஜய் முதல்முறையாக கலந்து கொண்டு எங்களுக்கு உங்க சாரி வேண்டாம் நீதிதான் வேண்டும் என ஆவேசத்தோடு பேசினார். அது மட்டும் இன்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களும் மேடையில் பேசினார்கள்.

இது வைரலான நிலையில் ஆளும் கட்சி தரப்பில் இணைய கூலிப்படைகள் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்தார்கள். மூன்று மணி நேரம் பேசுவார் என்று பார்த்தால் 3 நிமிஷத்துல முடிச்சிட்டாரு என தளபதியை கலாய்க்க தொடங்கினார்கள்.

TVK போராட்டக் களத்தில் நடந்தது என்ன

அதைத்தொடர்ந்து போராட்ட களத்தில் சிலர் மயங்கி விழுந்ததை வீடியோ எடுத்து குடிக்க கூட தண்ணி கொடுக்காமல் எல்லோரையும் கொடுமைப்படுத்துகிறார் என விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.

அதேபோல் பொது சொத்தை சேதப்படுத்தி விட்டார்கள் என போட்டோக்களை வைரஸ் செய்ய தொடங்கினார்கள். உண்மையில் என்னதான் நடந்தது விஜயின் வலதுகரமான புஸ்ஸி ஆனந்த் ஏற்பாடுகளை சரியாக செய்யவில்லையா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது.

ஆனால் எல்லா ஏற்பாடுகளும் சரியாகத்தான் செய்யப்பட்டிருக்கிறது. போராட்டம் 11 மணிக்குள் முடிந்து விட வேண்டும் என்று கூறி தான் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதே சமயம் போராட்ட களத்திற்கு வரக்கூடாது என்பதற்காக மாற்றுப்பாதை சொல்லி எட்டு கிலோமீட்டர் வெயிலில் நடக்க வைத்திருக்கின்றனர்.

இதனால்தான் பலருக்கு மயக்கம் வந்திருக்கிறது. அதேபோல் இவ்வளவு கூட்டம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு உள்ளிட்ட பொது சொத்துக்கள் சேதம் அடைந்து விட்டது.

ஆனால் அது எல்லாவற்றையும் நாங்கள் சரி செய்து கொண்டிருக்கிறோம். எங்களால் எந்த தொந்தரவும் இருக்காது என தொண்டர்கள் உறுதி கூறியுள்ளனர். அது மட்டும் இன்றி அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகளும் ஒரு பக்கம் வேகமாக நடந்தது.

மற்றபடி TVK தலைமையில் எந்த குறைபாடும் கிடையாது. பெண்கள் கூட பாதுகாப்பாகத் தான் இருந்தோம் என வெளிப்படையாகவே பெண் தொண்டர்கள் சொல்லி இருக்கின்றனர். இதில் மற்றொரு விஷயமும் தெரிய வந்துள்ளது.

அதாவது போராட்டம் எதிர்பார்த்தபடி நடக்கக் கூடாது என்பதற்காக ஆளும் கட்சி வெளியூரில் இருந்து வந்த தொண்டர்களை பாதியிலேயே நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் போராட்ட களத்திற்கு தேவையான ஏற்பாடுகளை கூட செய்ய விடாமல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தொடர்ந்து இந்த போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். உண்மையில் ஏகப்பட்ட தடைகள் இருந்தது தான் இதற்கெல்லாம் காரணம் என தெரிய வந்துள்ளது.