TVK கூட்டத்தில் நடந்த கூத்துக்கள்.. இதுக்கு யார் காரணம்?

Vijay : நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். 2026 தேர்தல் கட்சி ஆரம்பித்து வரும் முதல் தேர்தல் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் சிறப்பாக செய்து வருகிறார் விஜய்.

தனது கடைசி படமான ஜனநாயகம் படத்தி படப்பிடிப்பு முடிந்து , மீண்டும் அரசியல் கலத்தில் வெறித்தனமாக களமிறங்கியுள்ளார் விஜய். தற்போது நடந்த “லாக்கப்” மரணத்திற்கு பல்வேறு வகையில் ஆளுங்கட்சியை பார்த்து கேள்விகளை முன்வைத்திருந்தார் விஜய்.

இது எதற்கும் எந்த செயல்பாடும் நடக்காததால் நேரிடையாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கி போராடுகிறார் விஜய். நேற்று நடந்த இந்த போராட்டத்தில் விஜய் அவர்களும் அவர்களது தொண்டர்களும் காலத்தில் இறங்கு நேரிடையாகவே சில கோரிக்கைகளை முன்வைத்து போராடினார்கள்.

இதுஒருபக்கம் இருக்க ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்களை செய்த அட்டூழியங்கள் ஒருபக்கம் பேசப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்ததவர்களுக்கு தண்ணீர் இல்லை, நிறைய பேர் வெயில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தனர், கட்சி கம்பி கோடில்லாம் திருட்டு போயிட்டு.

போராட்டத்திற்கு வந்தவர்கள் நிறைய பேர் போராட்டம் முடிந்து கலைஞர் சமாதிக்கு சென்று போட்டோ எடுத்திகிட்டு இருந்துருக்காங்க. ஸ்டீல் கம்பிகளை உடைத்து சேதப்படுத்தி வைத்திருக்கிறார்கள், அழகு செடிகளையும் சேதப்படுத்துவிட்டார்களாம் , இந்த மாதிரி நிறைய பொது சொத்துக்களை சேதப்படுத்திவிட்டார்களாம்.

இதுக்கு யார் காரணம்..

போராட்டம் நடந்த இடமே சேதமடைந்துள்ளதாக தகவலால் கிடைக்கின்றன. உண்மையிலேயே இதை விஜய் தொண்டர்களுடன் செய்தார்களா? அல்லது விஜய் பேரை கெடுப்பதற்காக இந்த மாதிரியான செயல்கள் ஆட்களை தூண்டிவிட்டு விஜய் கட்சியின் எதிர்ப்பாளர்கள் செய்கிறார்களா? என்ற சந்தேகமும் பரவலாக எழுந்து வருகிறது.