TVK : தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி நடிகர் விஜய் அவர்கள் பரபரப்பான தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் கட்சி ஆரம்பித்து சில மாதங்கள் ஆன நிலையில் கட்சியின் கட்டமைப்பில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.
ஒரு கட்சிக்கு கட்சி கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியம், கட்சி கட்டமைப்பு சரியாக இருந்தால் மட்டுமே அந்த கட்சியினை அடுத்த கட்டத்திற்கு நாம் எடுத்துச் சொல்ல முடியும் என்று அதில் மிக கவனத்துடன் செயலாற்றி வருகிறார்.
கட்சி ஆரம்பித்து முதல் மாநாடு பிரம்மாண்டமாக எதிர்பார்த்ததை விட அதிக அளவுக்கு நடிகர் விஜய்க்கு பேரையும் புகழையும் பெற்று தந்தது. அவரது பேச்சும் செயலும் மிகவும் தெளிவாக உள்ளது என மற்ற கட்சியாளர்கள் அனைவரும் விஜயை கண்டு சற்று பயப்படத் தான் செய்கிறார்கள்.
ஒரு சில கட்சிகள் கூட்டணிக்கு தயாராக உள்ள நிலையில் நடிகர் விஜய் அவர்கள் யாரிடமும் கூட்டணி கிடையாது இப்போதைக்கு என்ற கருத்தை முன் வைத்துள்ளார். இவ்வாறாக இந்த கட்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் போது கட்சியின் பெயரைக் கேட்பதற்காக ஒரு சில செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
என்னதான் முதல் மாநாட்டிற்கு மிக கடினமாக வேலை செய்து அத்தனையும் துல்லியமாக நடிகர் விஜய் அவர்கள் பார்த்துக் கொண்டாலும் வந்த கூட்டத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. அதனால் அந்த மாநாட்டிலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டு, தண்ணீர் இல்லாமல் வெயிலில் என ஏகப்பட்ட பிரச்சனைகள்.
தற்போது விஜய் அவர்கள் லாக்கப் மரணத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஏகப்பட்ட பொது சொத்துக்கள் சேதம் அடைந்ததாகவும், தொண்டர்கள் அனைவரும் போதிய வசதிகள் எதுவும் இல்லாமல் அவதிப்பட்டதாகவும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.
TVK கட்சியின் நற்பெயர் நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டிருக்கிறது..
அனைத்தையும் கவனிக்கும் விஜய் இதை கவனிக்க மாட்டாரா என்று சில எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இல்லை எதிர்ப்பாளர்கள் ஊடுருவி இந்த வேலையை பார்த்திருப்பார்களா? என்ற கேள்வியும் பரவலாக எழுந்து வருகின்றன. இருந்தாலும் இதையெல்லாம் கவனிக்கும் பொறுப்பு நிச்சயமாக தமிழக வெற்றி கழகத்தையே சேர்ந்தது. இதற்கு காரணம் யார் புஸ்ஸி ஆனந்தா அல்லது ஆதவ் அர்ஜுனாவா? உள்கட்சியே இந்த வேலை பார்க்கிறதா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அவ்வளவு பொறுப்பின்றி எந்த ஒரு விஷயத்தையும் செய்து கொண்டிருக்கிறார்களா? அல்லது அனுபவம் இல்லாத கட்சி என்பதை நிரூபிக்கிறார்களா என்ற கேள்வி அனைவரும் மத்தியில் எழுந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் தமிழக வெற்றி கழகத்தின் நற்பெயர் நிலவைப் போல தேய்ந்து கொண்டிருக்கிறது.