சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிறிய பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் வெற்றி பெறுகிறது. ஆனால் பிரம்மாண்டமாக ஆடியோ லான்ச் மற்றும் வெளிநாடுகளில் சென்று ப்ரோமோஷன் செய்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவுகிறது.
ஆனாலும் தோல்வி படங்களுக்கு சக்ஸஸ் மீட் கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் விடாமுயற்சி மற்றும் சூர்யாவின் ரெட்ரோ படங்கள் குறைந்த வசூலை பெற்று பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. குறிப்பாக ரெட்ரோ படம் 110 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 54 கோடி மட்டுமே வசூல் செய்தது.
ஆனாலும் படம் வெளியான 104 ஆவது நாளில் சூர்யாவின் ரெட்ரோ படக்குழு கேக் வெட்டி கொண்டாடி இருந்தார். அதேபோல் கமலின் தக் லைஃப் படத்திற்கு படு பயங்கரமாக பிரமோஷன் செய்தனர். ஆனால் முதல் நாளே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வர தொடங்கியது.
ஓடாத படத்திற்கு சக்சஸ் வைத்து கொண்டாடிய படக்குழு
இதனால் பாக்ஸ் ஆபீஸில் படுமோசமான தோல்வியை தழுவியது. சிறிய பட்ஜெட் படங்களான டிராகன், டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், குடும்பஸ்தன், 3BHK மற்றும் பறந்து போ ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதற்கு பெரிதாக சக்சஸ் மீட் கொண்டாடாமல் சாதாரணமாக வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். இதற்கான வித்தியாசம் என்னவென்றால் பெரிய நட்சத்திரங்கள் என்பதால் தோல்வி படங்களையும் அவர்கள் வெற்றி படங்களாக மாற்றி சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் உண்மையான வெற்றி படங்கள் என்பது சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள் தான். அதுவும் தமிழ் சினிமாவை இப்போது அதிகமாக நல்ல படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருவது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.