Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவின் கோபம் சரியாக இருந்தாலும் அடுத்தவங்க வாழ்க்கையில் மூக்கை நுழைத்தது தப்புதான். அதுவும் சீதா மனதார ஆசைப்பட்ட அருணுடன் சேர்ந்து வாழ்வதற்கு முத்து எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் மீனா தன்னுடைய தங்கை சீதாவின் வாழ்க்கை சந்தோசமாக அமைய வேண்டும் என்று முத்துவுக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்தார்.
இந்த விஷயம் தெரிந்த முத்து கோபப்பட்டு மீனாவை அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் இது எதுவும் தெரியாத சீதா அருணுடன் சேர்ந்து வாழ்வதற்கு அவருடைய வீட்டிற்கு போவதற்கு தயாராகிட்டார். போகும்பொழுது வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் சீதாவிற்கு அட்வைஸ் சொல்கிறார்கள். அப்பொழுது பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் வந்து முத்துவைப் பற்றி ஆகோ ஓஹோ என்று பெருமையாக பேசி முத்துவை மாதிரி இருக்க வேண்டும் என அருணுக்கு புத்திமதி சொல்கிறார்கள்.
இதனால் கடுப்பான அருண் கோபத்தை வெளி காட்டாமல் அங்கிருந்து போவதற்கு தயாராகி விட்டார். அப்படி போகும் பொழுது சீதா, முத்துவுக்கு போன் பண்ணி நான் அருண் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்கிறார். உடனே முத்து புருஷன் கூட சந்தோசமாக வாழ வேண்டும். அதற்காக புருஷன் என்ன பண்ணாலும் அதை சகித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சுயமரியாதைக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை தட்டி கேட்க வேண்டும் என்று துணிச்சலுடன் இருப்பதைப் பற்றி சொல்கிறார்.
அந்த வகையில் முத்துவுக்கு மீனாவின் குடும்பத்தையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை, மீனாவையும் மறக்க முடியவில்லை. அவ்வப்போது முத்து மீனா ஞாபகத்தில் இருக்கிறார். இதற்கு இடையில் விஜயாவிடம் மீனாவிற்கு சப்போர்ட் பண்ணி பேசிய முத்துவை பார்த்து ரோகிணி, மனோஜிடம் இதுதான் சிறந்த கணவன் மனைவிக்குள் சந்தோஷமாக இருப்பதற்கான அர்த்தம். ஆனால் இது உன்னிடம் இல்லை என்று முத்துவை ஒப்பிட்டு பேசி மனோஜ் மனசையும் மாற்றி விட்டார்.
அந்த வகையில் மனோஜ், ரோகினி சொன்னது உண்மைதான் என்று ரோகினிடம் முழுமையாக சரணடைந்து விஜயாவிடம் பொய் சொல்ல தயாராகி விட்டார். இந்த சூழலில் அடுத்து பணம் கேட்டு மிரட்டும் பிளாக்மெயில் தினேஷிடம் ரோகிணி மாட்டிக்கொள்ளப் போகிறார். அத்துடன் க்ரிஷ் பற்றிய உண்மையும் வெளிவர போகிறது.