Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜியின் அம்மா உயிரோட தான் இருக்கிறார், அதுவும் தன்னுடைய வீட்டிலேயே மறைத்து வைத்திருக்கிறார் என்று ராமச்சந்திரனுக்கு தெரிந்துவிட்டது. அதனால் விஜியின் பித்தலாட்டத்தை புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். உடனே விஜி கர்ப்பம் ஆனது போல் டிராமா போட ஆரம்பித்து விட்டார்.
இதை நம்பிய ராமச்சந்திரன் மறுபடியும் விஜியை வீட்டுக்குள் வரவைத்து விட்டார். கார்த்திக் மீது எந்த தவறும் இருக்காது என்று அனைவருக்கும் புரிந்து விட்டது. ஆனாலும் பிருந்தா, கார்த்திக் மீது கோபப்பட்டு வீரா மாறன் வீட்டில் தங்கி இருக்கிறார். பிருந்தாவை தேடி கார்த்திக் பேச வந்தாலும் விஜி பேசிவிடாமல் தடுத்து ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்தி விடுகிறார்.
அதனால் விஜி போடும் டிராமாவுக்கு முடிவு கெட்டும் விதமாக மாறன் வீரா பிளான் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுடைய பிளானில் வள்ளியும் சேர்ந்து விட்டார் என்பதற்கு ஏற்ப விஜி போடும் கர்ப்ப டிராமாவுக்கு ஆப்பு வைக்க தயாராகி விட்டார்கள். அந்த வகையில் விஜி காதில் விழும் படி மாறன் கர்ப்பமானவர்கள் எப்படி இருப்பார்கள் என்று வள்ளி அத்தையிடம் கேட்டு சீன் கிரியேட் பண்ணுகிறார்கள்.
இதைக் கேட்ட விஜி, அதே மாதிரி தானும் மாற வேண்டும் என்று தன்னைத்தானே வருத்திக்கொண்டு எல்லோரையும் நம்ப வைத்து வருகிறார். இதுதான் வேண்டுமென்று மாறனும் இந்த விஷயத்தை வைத்து விஜியை கையும் களவுமாக பிடிப்பதற்கு வள்ளி வீரா மற்றும் கண்மணியுடன் கூட்டணி போட்டு காய் நகர்த்தி வருகிறார். ஒட்டுமொத்தமாக விஜி சொன்னது எல்லாம் பொய் என்று அனைவருக்கும் தெரிந்த நிலையில் வீட்டை விட்டு விரட்டி அடிக்க போகிறார்கள்.