40 வருட கேரியரை சல்லி சல்லியாக நொறுக்கிய லோகேஷ்.. நாகர்ஜுனாவுக்கு ஏற்பட்ட சங்கடம்

Lokesh kanagaraj : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நாகர்ஜுனா நடிக்கிறார். நாகர்ஜுனா இதற்கு முன்னதாக தமிழில் நிறைய படங்கள் நடித்து இருந்தாலும் இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமான படமாக அமைய இருக்கிறது.

ஆரம்பத்தில் கூலி படத்தில் நாகர்ஜுனா நடித்த ஆக்சன் காட்சிகள் இணையத்தில் வெளியானது. இதை அடுத்து பலரது உழைப்பை சிலர் இவ்வாறு வீடியோ எடுத்து வீணடிப்பதாக லோகேஷ் தனது வருத்தத்தை பதிவிட்டு இருந்தார். இந்த சூழலில் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி படம் வெளியாக இருக்கிறது.

இந்த சூழலில் லோகேஷ் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்த நிலையில் நாகர்ஜுனாவை பற்றி பேசி இருக்கிறார். அதாவது கூலி படத்தின் கதையை சொல்லும்போது நாகர்ஜுனா இந்த கேரக்டரில் நடிக்க சம்மதம் தெரிவிக்க வில்லையாம். ஏனென்றால் தனது 40 வருட சினிமா வாழ்க்கையில் இதுபோன்ற மோசமான கெட்ட வார்த்தை பேசும் கேரக்டரில் நடித்ததில்லையாம்.

லோகேஷால் நாகர்ஜுனாவுக்கு ஏற்பட்ட சங்கடம்

அதுவும் பயங்கரமான வில்லன் கதாபாத்திரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு லோகேஷ் 8 முறைக்கு மேல் கதையை மீண்டும் சொல்லி சொல்லி தான் நாகர்ஜுனாவை சம்மதிக்க வைத்தாராம். மேலும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவும் கூலி படத்தில் நடிக்க நாகர்ஜுனா ஒப்புக்கொண்டு உள்ளார்.

விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தது பலராலும் பாராட்டப்பட்டது. அவ்வாறு நாகர்ஜுனா கேரக்டர் பாராட்டும்படி இருக்கிறதா அல்லது 40 வருட சினிமா வாழ்க்கையை சல்லி சல்லியாக நொறுக்கும் அளவுக்கு லோகேஷ் எடுத்திருக்கிறாரா என்று படம் வெளியானால் தான் தெரியும்.

ஏனென்றால் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகள் இடம் பெறுகிறதாம். மேலும் கூலி படத்தில் சத்யராஜ் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில் கேட்ட உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம். 38 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சத்யராஜ் மற்றும் ரஜினி இணைவது குறிப்பிடத்தக்கது.