அரசிக்கும் குமரவேலுக்கு கல்யாணம், மகளை கூப்பிடும் பாண்டியன்.. வெளிவந்த ரகசியம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி உண்மையை சொன்ன பிறகு அப்பத்தா வீட்டுக்குள் கூட்டிட்டு போயி நடந்த உண்மை என்னவென்று கேட்கிறார். அதற்கு அரசி அன்னைக்கு சொன்னது பொய். இன்று சொன்னது அத்தனையும் உண்மை என்று சொல்லிய நிலையில் குமரவேலுவும் ஆமாம் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே அப்பத்தா, இதனால் அரசி வாழ்க்கை வீணாகும் என்பதால் இவர்களுக்கு நாம் அனைவரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று முடிவு சொல்கிறார். அப்பத்தா முடிவும் சரியானது என்று முத்துவேல் யோசிக்க ஆரம்பித்து விட்டார். இன்னொரு பக்கம் கோமதி, இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியாக நிலையில் பாண்டியனுக்கு போன் பண்ணி வர சொல்லுகிறார்.

பாண்டியன் வந்ததும் இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியாக நிற்கிறார். ஆனால் தங்கமயில், கல்யாண விஷயத்தில் யாரும் இப்படி பொய் சொல்லி இருக்க மாட்டாங்க. அதனால் அண்ணனையும் புருசனையும் காப்பாற்றுவதற்காக இன்று அரசி பொய் சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்டதும் மீனா, ரகசியத்தை சொல்லும் விதமாக அரசி இன்னைக்கு சொன்னது தான் உண்மை.

அவங்களுக்கு நிஜமாகவே கல்யாணம் ஆகவில்லை என்று சொல்கிறார். உடனே எல்லோரும் இது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்ட நிலையில் ராஜி, நாங்கள் அரசியை சந்தித்து பேசினோம். கல்யாணம் முடிந்த மறுநாளே எங்களுக்கு தெரியும் அரசிக்கும் குமரவேலுக்கும் கல்யாணம் நடக்கவில்லை என்று. ஆனால் இந்த உண்மையை யாரிடமும் சொல்லக்கூடாது என்று எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டதாக ராஜி சொல்லுகிறார்.

இதை கேட்டதும் கோமதி, நீங்க ரெண்டு பேரும் என்னதான் நினைக்கிறீங்க எல்லா விஷயத்தையும் இப்படி மறைத்து மறைத்து வைக்கிறீர்கள் என்று திட்ட ஆரம்பிக்கிறார். உடனே கோமதி அம்பாசமுத்திரத்தில் குமரவேலு வந்து மீனா கையில் அடி வாங்கின விஷயத்தை உலர ஆரம்பிக்கிறார். ஆனால் செந்தில் பாதியிலேயே சொல்ல விடாமல் தடுத்து அம்பாசமுத்திரத்தில் வந்து பிரச்சனை பண்ணியதை மட்டும் சொல்லி முடித்து விடுகிறார்.

இதைக் கேட்டதும் பாண்டியன், இதெல்லாம் ஒரு குடும்பமா? ஆளுக்கு ஆளுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் மறைத்து வைத்து பிரச்சினையை பெருசாக்குனதும் என்னிடம் வந்து சொன்னால் நான் என்ன பண்ண முடியும் என்று திட்ட ஆரம்பிக்கிறார். உடனே செந்தில் இந்த பிரச்சினையை அப்புறமாக பேசிக்கலாம் முதலில் அரசியே அந்த வீட்டில் இருந்து கூட்டிட்டு வரவேண்டும் என்று சொல்கிறார்.

உடனே பாண்டியன் குடும்பத்துடன் சேர்ந்து முத்துவேல் வீட்டு வாசலில் நின்று அரசியை கூப்பிடுகிறார். அரசியும் அப்பா வந்து பாசமாக கூப்பிடுகிறார் என்று போகிறார். அப்பொழுது பாண்டியன், அரசியை பார்த்து என்னைப் பற்றி குடும்பத்தைப் பற்றி யோசித்த நீ உன் வாழ்க்கை பற்றி யோசிக்காமல் விட்டுட்டியே என்று கேட்கிறார். இனியும் இவனுடன் நீ இருக்கத் தேவையில்லை வீட்டுக்கு வா என அரசியே கூப்பிடுகிறார்.

ஆனால் அரசி எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். என்ன ஆனாலும் இனி குமரவேலுடன் அரசி இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் பாண்டியன் கூப்பிட்டதும் வீட்டிற்கு போய்விடுவார்.