ஆடி மாதத்துக்கு முன்பு போடப்பட்ட அம்புட்டு பூஜைகள்.. ஜீவா, விஷால் என கலைக்கட்டும் சினிமா

ஆடி மாதம் வந்து விட்டாலே தொழில் பண்ணுவோர் பல ஆஃபர்களை அள்ளித் தெளிப்பார்கள். இதுதான் சந்தர்ப்பம் என பயன் பெறுபவர்கள் பல பேர். ஆனால் ஆடி மாதத்தில் சில விஷயங்களை செய்ய மாட்டார்கள். அதனால் அதற்கு முன்பு பூஜையை போட்டு விட வேண்டும் என தயாரான படங்களின் லிஸ்ட்.

ஜீவா: ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஜீவா இணைந்து நடிக்கும் புது படம் ஒன்று பூஜை போடப்பட்டுள்ளது. இது ஜீவாவின் 46வது படம். ஏற்கனவே ஜீவாவை வைத்து பிளாக் படத்தை இயக்கிய கே ஜி பாலசுப்பிரமணியம் இதை இயக்குகிறார். துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

D54: தனுஷ் ஏற்கனவே இந்த படத்தின் பூஜையை ஒரு வாரத்திற்கு முன்பே போட்டு விட்டார். ஈசிஆர் இல் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பட ஆர்டிஸ்ட்டுகள் கலந்து கொண்டனர். மம்தா பஜுலு, ஜெயராம், சூரஜ் போன்ற மலையாள நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள். போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இதை இயக்குகிறார்.

விஷால்: மதகஜராஜா படத்திற்குப் பிறகு விஷால் இயக்குனர் ரவி அரசு உடன் கூட்டணி போட உள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்தை விஷால் தயாரிப்பதாக இருந்தது இப்பொழுது ஆர் பி சவுத்ரி, விஷால் கொடுக்கவேண்டிய தொகைக்கு பதிலாக தயாரிக்க முன்வந்துள்ளார்.

கார்த்தி: டானாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அவரது 29 வது படம் இது. இந்த படத்திற்கு மார்ஷல் என்று பெயர் வைத்துள்ளனர். ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் இதில் நடிக்கிறார். இதுவும் ஜூலை 10ஆம் தேதி பூஜை போடப்பட்டுள்ளது.