மருமகள் : தாலியை ஏற்றுக் கொள்வரா சத்யா.. பிரைன் வாஷ் செய்யும் ஆதிரை

Marumagal : சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் நம்ம இல்லத்தரசிகளின் ஃபேவரட் ஆக உள்ளது. சன் டிவியில் பல சீரியல்கள் கொடுக்கும் TRP போதாதென்று இந்த சீரியலும் TRP ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள்..

ஆதிரையின் மீது தவறான குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. இதற்கு ஆதரவாக குடும்பத்தார்கள் நிற்பார்கள் என்று அவள் நம்புகிறாள். இந்நிலையில் குடும்பத்தில் உள்ள சிலர் அவளுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால் இன்னொரு பக்கம் இருப்பவர்கள் இவளை சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். இந்தப் போராட்டம் தான் தற்போது மருமகள் சீரியலில் நடந்து கொண்டிருக்கிறது.

மனைவிக்குத் துணை..

பிரபு தன் மனைவி ஆதரவை விட்டுக் கொடுக்காமல் துணையாக நின்று போராடுகிறான். ” நம் வாழ்க்கையை நம்பிக்கையுடன் நடத்தணும்” என்று அவளுக்கு உறுதி கொடுக்கும் வகையில் பேசுகிறான். இந்த மாதிரி பிரபு பேசுவது ஆதிரைக்கு ஆதரவாக இருக்கிறது.

சத்யா ஏற்றுக் கொள்வாளா?

பிரபுவின் தம்பி கார்த்தி சத்யா கழுத்தில் தாலி கட்டிய பிரச்சினை தற்போது போலீஸ் ஸ்டேஷனில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதிரை சத்யாவை பார்த்து “அவனுக்கு நீ தண்டனை கொடுக்க போறியா இல்ல வாழ்க்கை கொடுக்க போறியா” என்று கேட்கிறாள். உடனே எழுந்து கோபத்துடன் நான் யாருன்னு தெரியுமா என்று போபட்த்துடன் பேசுகிறாள் சத்யா. நீ யாராய் இருந்தாலும் ஒரு பொன் தானே என்கிறாள் ஆதிரை.

தாலிக்கு இருக்கும் மதிப்பு உனக்கு தெரியாதா என்று கேட்க ” இந்த மஞ்ச கயிற்றை நான் தாலியா பாக்கல” அப்படின்னு சொல்கிறாள் சத்யா. ” உன்னுடைய சம்மதத்தில் இந்த தாலி கட்டாமல் இருக்கலாம் ஆனால் அதற்கான மதிப்பை நீ கொடுத்தாக வேண்டும். கார்த்தி உனக்கு கட்டாய தாலி கட்டினாலும் இதுவும் தாலி தான் என்கிறாள் ஆதிரை.

கார்த்தி நல்லவன் தான், இந்த தாலியால் உன் வாழ்க்கையை நல்லபடியாக ஏற்படுத்திக்க முடியும் என்று மாதிரி சொல்ல சொல்ல சத்யாவின் அண்ணன் சண்டைக்கு வருகிறான். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ” நீங்க யாரு சும்மா கத்துக்கிட்டே இருக்கீங்க, சத்யாவோட அண்ணனா இருந்தால் ரொம்ப பேசிக்கிட்டே இருப்பீங்களா? இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது சத்யா தான் நீங்க இல்லை என்று ஆதிரை பேசியதும், கோபத்துடன் சத்யா முகம் மாகிறது.