எவ்வளவு கேட்டும் ஒத்துக்கொள்ளவில்லை.. அமீர்கான் செய்த செயலால் மனம் வருந்திய லோகேஷ்

Logesh kanagaraj : தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் அறிமுகவனவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதலில் மாநகரம் படம் மட்டும் எடுத்துவிட்டு, பிறகு சிறிது காலம் இடைவெளி எடுத்துக்கொண்டு, திரும்பவும் கைதி படம் மூலம் மாஸ் என்று கொடுத்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்த கைது திரைப்படத்தில் இவர் கையாண்ட யுக்திகள் அனைத்துமே அனைவராலும் வரவேற்கப்பட்டது. இவர் அந்த படத்தில் மேலும் ஒரு சிறப்பம்சமாக பழைய பாடல்களை பயன்படுத்தி புதிதாக ட்ரெண்ட் கொடுத்தவர். மேலும் இந்த படத்தில் பிரியாணி காட்சியும்பிரபலமாக்கப்பட்டது.

அவ்வாறாக இவர் இயக்கிய படம் தான் விக்ரம். இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். மேலும் இந்த படத்திலும் பழைய பாடல்கள் ட்ரெண்டாக்கப்பட்டன. இந்த விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த மாதிரியான படங்களை தொடர்ந்து தற்போது வெளிவரங்களுக்கும் கூலி திரைப்படத்தில் நிறைய திரை பிரபலங்கள் நடித்துக் கொடுத்து இந்த படத்தை இன்னும் பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.

எவ்வளவு கேட்டும் ஒத்துக்கொள்ளவில்லை..

இதில் முக்கியமான கேமியோ ரோலில் நடிகர் அமீர்கான் காட்சி இடம் பெற்று இருக்கிறது. அமீர்கான் அவர்கள் கூலி படத்தில் நடிப்பது சர்ப்ரைஸ் ஆகவே இருக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் அவர்கள் எதிர்பார்த்து தகவலை யாருக்கும் சொல்லவில்லை. இதனால் இந்த படக்காட்சியும் ரகசியமான ஒரு இடத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் அமீர்கான் கேமரா முன்பு என்னால் பொய் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். அதனால் தான் லோகேஷ் கனகராஜ் அவர்களும் சரி கூறி விடுங்கள் என கூறியிருக்கிறார். இதனால் தான் அமீர்கான் கூலி படத்தில் நடித்திருப்பது வெளியில் தெரியவந்தது.

இல்லையென்றால் படம் ரிலீஸ் ஆகி மக்கள் பார்த்தவுடன் தான் அமீர்கான் அவர்கள் கூலி படத்தில் நடித்திருப்பது தெரிய வந்திருக்கும். இவ்வாறு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் கலகலப்பாக பேசியுள்ளார்.