Thuglife: 1987ல் ‘நாயகன்’ மூலம் மாஸ்டர் பீஸ் கொடுத்த கமல்-மணிரத்னம் கூட்டணி, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த படம் தக் லைஃப். இதில் அபிராமி, சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைஞானி ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து, பெரிய நட்சத்திரப் பட்டாளம் கலந்துக் கொண்டிருந்தது.
ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இப்படம், ₹250 கோடி பட்ஜெட்டில் உருவானது. பான் இந்தியா ரிலீசாக இருந்தாலும், மொழி சர்ச்சையால் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
வசூல் தோல்வி ஓடிடி வெளியீடு
ஜூன் 5 அன்று வெளியான இந்த படம், எதிர்பார்ப்புக்கு மாறாக திரையரங்குகளில் வெற்றியடையவில்லை. ₹100 கோடியும் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ரசிகர்களிடையே “மணிரத்னமா இதைப் படமா எடுத்தார்?” என்ற அளவுக்கு விமர்சனங்கள் வந்தன.
தியேட்டரில் தோல்வியடைந்ததால், படம் நான்கே வாரத்தில் நெட்பிளிக்ஸில் ஜூலை 3 அன்று வெளியாகியது. தியேட்டரில் பிளாப் ஆனாலும், முதல் இரண்டு வாரங்களில் 57 லட்சம் வியூஸ் பெற்று இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.இந்த ஓடிடி வெற்றியால் படக்குழுவுக்கு மீண்டும் உற்சாகம் கொடுத்திருக்கிறது.
ஏன் இப்படம் தியேட்டரில் ஓடவில்லை?” என ரசிகர்கள் கேட்பது போல, இதற்குப் பின்னிலான காரணம் – படத்தின் மையக்கரு, screenplay, மற்றும் எடிட்டிங் என அனைத்தும் கலக்கியது. இந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் படத்துக்கு புதிய உயிரூட்டியது.
இந்த வெற்றியின் பின்னணியில், சீனாவில் ‘மகாராஜா’ வெளியானது போல், தக்லைஃப்பையும் அந்த சந்தைகளில் வெளியிட படக்குழு யோசிக்கிறார்கள். இந்தியன் 2க்கு கிடைக்காத மாறுபட்ட அடையாளத்தை தக்லைஃப் இப்போது பெற்றுள்ளது. இப்படி ஒரு ஹிட், ஓடிடி வெற்றியின் புதிய வரலாறு.