TRP-யில் மிரட்டி விட்ட தளபதியின் லியோ.. பார்ட் 2 வருமா லோகி.?

Leo 2: மாஸ்டர் வெற்றிக்கு பிறகு லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முதல் த்ரிஷா, அர்ஜுன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அறிவிப்பில் தொடங்கி ரிலீஸ் வரை ஏகப்பட்ட அப்டேட் கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்தது பட குழு. அதை அடுத்து படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இரண்டாம் பாதி சில விமர்சனங்களை சந்தித்தாலும் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் விஜய் மக்கள் பணி தான் முக்கியம் என ஜனநாயகன் படத்தோடு சினிமாவுக்கு குட் பை சொல்கிறார். இருப்பினும் அவர் மீண்டும் நடிக்க வருவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது.

பார்ட் 2 வருமா லோகி.?

இந்நிலையில் சமீபத்தில் சன் டிவியில் லியோ படம் ஒளிபரப்பானது. எப்போதுமே விஜய் படம் டிவியில் போட்டால் டிஆர்பி கிடுகிடுவென உயர்ந்துவிடும். அதனாலேயே சன் குழுமம் விஜய் படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

அதன்படி லியோ வெளியான நேரத்தில் சன் டிவியின் டிஆர்பி 9.40 ஆக இருக்கிறது. கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் சிட்டி பகுதியிலும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்திருக்கிறது.

இதே படத்தை எத்தனை வாட்டி போட்டாலும் கூட மக்கள் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு விஜய்க்கு நல்ல ஆதரவு இருக்கிறது. அதனால் எப்படியாவது 2வது பாகத்தில் அவரை நடிக்க வைத்து விடுங்கள் என லோகேஷிடம் ரசிகர்கள் அன்பாக வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.