Suriya : சமீபகாலமாக திரையுலகம் ப்ரோமோஷனுகாக மோசமான விஷயங்களை கையாண்டு வருகிறது. அதாவது பெரிய நடிகர்களின் படங்களை பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தயாரிப்பாளர்கள் க்ளிம்ஸ் வீடியோ, டீசர், ட்ரைலர் என தனித்தனியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அது தவிர மிகப்பெரிய அப்டேட் என்று போஸ்டர்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சூர்யாவின் 45 ஆவது படமான கருப்பு படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான முக்கிய அப்டேட் இன்று வெளியாக என காத்திருந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ ரைட்சை Think Music பெற்றிருப்பதாக போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றனர்.
ப்ரோமோஷனுகாக மோசமான வேலை செய்யும் படக்குழு

அதாவது கருப்பு படத்தில் சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார். அவருடைய படங்கள் இன்னும் ஒன்று கூட வெளியாகாத நிலையில் பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி இருக்கிறார். நல்ல தொகைக்கு இந்த படத்தின் ஆடியோ உரிமை விற்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இது ஒரு பெரிய அப்டேட்டாக வெளியாகவில்லை. அதாவது படத்தின் போஸ்டர் அல்லது வீடியோ ஏதாவது வெளியாகும் என எதிர்பார்த்த அவர்களுக்கு இது ஏமாற்றம் தான்.
கருப்பு படம் மட்டும் அல்லாமல் சமீப காலமாக வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களிலும் இதே வேலை தான் நடந்து வருகிறது. தயாரிப்பு நிறுவனங்கள் இனிமேலாவது ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகரித்து ஏமாற்றத்தை கொடுக்கக் கூடாது.