Memes: இப்போது ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை முடி கொட்டுவது தான். உணவு பழக்கங்களின் மாற்றம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் 20 வயதிலேயே இந்த பிரச்சனை பல பேருக்கு வந்து விடுகிறது. அதிலும் 30 வயதை தொட்டால் நரை முடி வேறு வந்து பாடா படுத்துகிறது. தாத்தா பாட்டிக்கு கூட கொஞ்சமா தான் நரைமுடி இருக்கு.

ஆனா நமக்கு இப்பவே தலை முழுக்க வெள்ளையா தான் இருக்கு என கவலைப்படாத இளம் தலைமுறையே கிடையாது. அதேபோல் முடி கொட்டி வழுக்கை வந்து மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது.

ஒரு கல்யாணம் முடிச்சுட்டு இந்த வழுக்கை வந்தால் பரவாயில்லை. இப்பதான் பொண்ணு பாத்துட்டு இருக்காங்க அதுக்குள்ள இது வேற என பலர் வெளியில் சொல்ல முடியாமல் புலம்புகின்றனர்.

அதேபோல் பெண்களுக்கும் பிரசவத்திற்கு பிறகு இந்த பிரச்சனை வந்து விடுகிறது. அதிலும் தலை சீவும் போது முடி கொட்டினால் கூட ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா லேசா காத்தடிச்சாலே முடி கொட்டும் சம்பவங்களும் உண்டு.

அதே மாதிரி வீடு முழுக்க அங்கங்க முடியா இருக்கும். விஷயம் தெரியாதவர்கள் வீட்டுக்குள் வந்தால் வீட்டிலேயே முடி வெட்டிக்குவாங்க போல, சலூனுக்கெல்லாம் போக மாட்டாங்களா என நினைப்பாங்க.

ஆனா நமக்கு தான் தெரியும் அது வெட்டுனது இல்ல நம்ம தலையில இருந்து கொட்டுனதுன்னு. இப்படி முடி உதிர்வு சம்பந்தப்பட்ட பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.
