Vanitha vijayakumar : நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள், திரையுலகத்திற்கு சிறு வயதிலிருந்து அறிமுகமானவர். அது மட்டும் இல்லாமல் திரை உலகில் பேர் போன குடும்பமான விஜயகுமார் குடும்பத்தில் பிறந்தவர்.
இவர் நடிப்பில் வெளிவந்த நிறைய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி படமாகவே அமைந்திருக்கின்றன. ஆனால் இவர் தற்போது நிறைய விவாதங்களுக்கு உள்ளாகி இருந்தார். காரணம் இவர் அடுத்தடுத்து திருமணம் செய்தது திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.
இப்போது இவர் மட்டுமல்லாமல் இவரது மகளும் திரையுலகத்தில் கால் பதித்துள்ளார். இவரது மகள் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகியுள்ளார்.
வனிதா விஜயகுமார் தற்போது வனிதா ப்ரொடக்ஷன், வனிதா இயக்கத்தில் Mrs&Mr என்ற படத்தை தயாரித்து ரிலீஸ் ஆகியும் விட்டது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் பாடல் இடம் பெற்றுள்ளதால் இளையராஜா வழக்கு பதிந்துள்ளார்.
இளையராஜாவிற்கே ஸ்கெட்ச் போட்ட வனிதா..
இந்த சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்க, வனிதா விஜயகுமார் அவர்கள் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் இளையராஜா வீட்டு ஒரு பையன் என்னை பார்த்து நீ என்னை காதலிக்கிறாயா அல்லது எனது அப்பாவை காதலிக்கிறாயா என்று கேட்டதாகவும். அதற்கு வனிதா நான் உன் அப்பாவை தான் காதலிக்கிறேன் என்று பதில் சொன்னதாகவும் கூறியுள்ளார்.
இதை பற்றி எல்லாம் நான் வெளிப்படையாக பேச முடியாது அவ்வாறு பேசினால் எனக்கு தான் பிரச்சனை என்றும், காசுக்காக தான் இளையராஜா இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இந்த செய்தியானது திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
இதற்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில் வனிதா விஜயகுமார் நான் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக செல்ல வேண்டிய வழி என்று கூறியுள்ளார். தற்போது இளையராஜாவை காதலிப்பதாக கூறியுள்ளதாக கூறியுள்ளார். ஆகவே நீங்கள் ஸ்கெட்ச் போட்டது நேரடியாக இளையராஜாவிற்கு தானா என்ற கேள்வி? பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.