மருமகள் : பழிவாங்க ஏற்றுக் கொள்ளும் தாலி.. சத்யாவின் திட்டம் ஆதிரையிடம் பழிக்குமா

Marumagal : சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் தற்போது அடுத்தடுத்த திருப்பங்கள் சுவாரசியமான கட்டத்துடன் நகர்ந்து கொண்டு வருகிறது. கார்த்திக் சத்யாவுக்கு கட்டாய தாலி காட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனக்கு கட்டாய தாலி கட்டிய கார்த்தியை ஜெயில் வைக்க முடிவு செய்த சத்யா, கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுக்கப் போகிறாள். அந்த சமயம் “நீ எனக்கு கொடுத்திருக்கும் தன்மையை விட நான் உனக்கு கொடுத்திருக்கும் தண்டனை தான் ரொம்ப பெருசுடி” என்று கார்த்தி சொல்லுவதை பார்த்து, எழுந்து அவன் அருகே சென்று,

“யானை தன் தலையில் அதுவா மண்ண வாரி போட்டுக்கும், அது போல தான் நீ இன்னும் சித்திரவதை அனுபவிக்கப் போகிறாய்” என்று சத்யா கார்த்தியிடம் கூறியது அதிர்ச்சியை கிளப்பியது. மீண்டும் போலீஸிடம் சென்று நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம்.

அவர் மீது தவறு இல்லை என்று கூறும்போது அவள் அண்ணன் அவங்க குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு தப்பான முடிவு எடுக்காதம்மா நான் உனக்காக இருக்கேன் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறேன் என்று கூறுகிறான். இல்லை அண்ணா இது என்னுடைய வாழ்க்கை எனக்கு தெரியும் இன்று முடிவெடுத்து விட்டால் சத்யா.

ஆதிரையிடம் வாழ்க்கை எனக்கு கொடுத்த இந்த தாலியை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு கார்த்திகை விடுவிக்குமாறு போலீஸ் இடம் கேட்கிறாள். இதிலிருந்து அவளது ஆட்டம் ஆரம்பம் என தெரிய வருகிறது. இதனையடுத்து கார்த்திக்குடன் வீட்டிற்கு கிளம்புகிறாள் சத்யா. காரில் இருந்து கெத்தாக இறங்கிய சத்யாவை பார்த்து குடும்பமே மிரண்டு போகிறது.

பிடித்தாலும் புலிய கொம்பா புடிச்சி இருக்கானே” என்று குடும்பத்தில் இருப்பவர்கள் கூறுகிறார்கள் ஆனால் சத்யா பழிவாங்கும் எண்ணத்தில் தான் குடும்பத்தில் நுழைந்து இருக்கிறாள் என்பது யாருக்கும் தெரியவில்லை. சத்யா எந்த வகையில் குடும்பத்திற்கு தொல்லை அளிக்க போகிறாள்? அதைத் தடுத்து நிறுத்துவாளா ஆதிரை?