அரசிக்கு பிறந்த விடிவு காலம்.. வெளிவரப் போகும் சுகன்யாவின் முகம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி கழுத்தில் குமரவேலு தாலி கட்டவில்லை என்று பாண்டியனுக்கு தெரிந்த நிலையில் சக்திவேல் வீட்டிற்கு சென்று அரசியை கூப்பிட்டு பேசினார். அப்பொழுது அங்கு இருந்தவர்கள் ஒவ்வொருவரும் கருத்து சொல்லும் பொழுது பாண்டியன் எல்லோருடைய வாயையும் மூட சொல்லிவிட்டு அரசிடம் பேசுகிறார்.

எதற்காக நீ இந்த நரகத்தில் இவன் கூட இருக்க வேண்டும், என்னை பற்றியும் குடும்பத்தை பற்றியும் யோசித்த நீ, உன்னை பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டியே? என்று பாசமாக பேசுகிறார். அப்பொழுது இந்த குமரவேலுவை நான் பழிவாங்க தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன் என்னை மன்னித்து விடுங்கள் அப்பா என்று அரசி மன்னிப்பு கேட்கிறார்.

அந்த சமயத்தில் அப்பத்தா, நடந்தது நடந்து போகட்டும், குமரவேலுக்கு அரசிக்கும் நாம் அனைவரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைத்து விடலாம் என்று ஐடியா கொடுக்கிறார். இதை கேட்டதும் பாண்டியன் கோபப்பட்டு இப்படிப்பட்டவனுடன் என்னுடைய மகள் வாழ்வதற்கு என் மகளாக என் வீட்டிலே இருந்துட்டு போகட்டும் என்று சொல்கிறார்.

அதன் பிறகு அரசியை என்னுடன் வீட்டுக்கு வா என்று பாண்டியன் கூப்பிடுகிறார். அரசி வருகிறேன் என்று சொல்லி கிளம்பிய நேரத்தில் அந்த தாலியை அவன் முகத்தில் தூக்கி எறிந்து விட்டு வா என்று பாண்டியன் சொல்கிறார். அதன்படி அரசியும் தாலியை கழட்டி குமரவேலு முகத்தில் எரிந்து விட்டு பாண்டியனுடன் கிளம்பி விடுகிறார்.

எல்லா உண்மையும் தெரிந்த நிலையில் அடுத்து சுகன்யாவின் உண்மையான முகமும் வெளிவரப்போகிறது. அரசி இந்த நிலைமைக்கு ஆளானதற்கு சுகன்யாவும் காரணம் தான் என்று பாண்டியன் குடும்பத்துக்கு தெரிந்து பழனிவேலு, சுகன்யாவை வீட்டை விட்டு அனுப்பப் போகிறார்.