சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா.. 2 விஷயத்திற்கு கொடுத்த பதிலடி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் கடந்த இரண்டு வருடங்களாக இந்த ஒரு சீரியல் தான் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை காப்பாற்றி வருகிறது என்பதற்கு ஏற்ப முதல் இடத்தில் சிறகடிக்கும் ஆசை சீரியல் இருக்கிறது. முக்கியமாக சன் டிவி சீரியலுடன் போட்டி போடும் விதமாக டாப் 5 இடத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த நாடகத்தை விரும்பிப் பார்த்தாலும் தற்போது கதை சரியாக இல்லாமல் துவண்டு போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில வாரம் மீனா மற்றும் முத்துவின் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி கதை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த சூழ்நிலையில் இதில் மீனா, கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியா பற்றிய சர்ச்சையான விஷயம் வெளிவந்தது.

அதாவது கோமதி பிரியாவிற்கு கல்யாணம் நடக்கப்போகிறது மணப்பெண்ணாக தயாராகி விட்டார் என்றும் ஒரு நடிகரை குறிப்பிட்டு அவர்தான் காதலன் என்றும் சில பொய்யான தகவல்கள் வெளியானது. ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கோமதி பிரியா சொன்னது என்னவென்றால் விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசி போல் நான் தயாராகி விட்டேன் என்று சொல்லியிருந்தார். மற்றப்படி இப்போதைக்கு கல்யாணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து தெலுங்கு குக் வித் கோமாளி-யில் கலந்து கொண்டிருக்கும் கோமதி பிரியாவின் சில போட்டோக்களை பார்த்து இனி அவர் சீரியலில் நடிக்க மாட்டார். சிறகடிக்கும் ஆசை சீரியலில் இருந்து விலகுகிறார் என்றும் தகவல் நேற்றிலிருந்து சோசியல் மீடியாவில் பரவி வந்தது.

ஆனால் இது வெறும் வதந்தி தான், இப்போது 700 எபிசோடு தாண்டிய நிலையில் இன்னும் ஆயிரம் எபிசோடுக்கு மேல் வந்தாலும் முத்து மற்றும் மீனா அவர்களுடைய கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதற்கு ஐடியாவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.