Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கடந்த சில மாதங்களாக வெண்ணிலாவின் கதை மூலம் பார்ப்பவர்களை போரடிக்க வைத்து விட்டது. அதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக தற்போது விஜய்க்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. அதாவது வெண்ணிலாவின் தற்கொலைக்கு விஜய் தான் காரணம் என்று ஒரு வழக்கு போய்க்கொண்டிருக்கிறது.
ஆனால் இதெல்லாம் பசுபதியின் சூழ்ச்சி தான் என்று நிரூபிப்பதற்காக காவிரி வெண்ணிலாவை கூட்டுக்கு கூட்டிட்டு வந்து கொண்டிருக்கிறார். குமரன், வெண்ணிலாவின் மாமாவான நம்பிராஜனை சாட்சி சொல்ல கூட்டி வருகிறார். இதற்கெல்லாம் மூல காரணமாக இருக்கும் பசுபதியை நவீன் கூட்டிட்டு வருகிறார்.
இப்படி எல்லாம் ஒன்று சேரும் இந்த தருணத்தில் பசுபதி மீதான வழக்கு உறுதியாக நிலையில் பசுபதி ஜெயிலுக்கு போகப் போகிறார். எந்த குற்றமும் செய்யாத விஜய் நிரபராதி என்று விடுதலையாகி காவேரி உடன் வாழ்வதற்கு தயாராகி விட்டார். ஆனால் காவிரி, வெண்ணிலாவுக்கு கொடுத்த சத்தியத்தின்படி விஜயை விட்டு போவதற்கு தயாராக நிற்கிறார்.
ஆனால் இதையெல்லாம் பார்த்த வெண்ணிலா, என்னுடைய காதலை விட உன்னுடைய காதல்தான் பெருசு என்று நிரூபித்து விட்டாய். உனக்கு தாலி கட்டி உன் வயிற்றில் குழந்தை இருக்கும் பட்சத்தில் கூட விஜய் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக விட்டுக் கொடுக்க நீ தயாரானாய். அதுதான் உண்மையான காதல், நான் உங்க சந்தோஷத்தில் வர விரும்பவில்லை. அதனால் என்னுடைய மாமாவுடன் கிராமத்துக்கே போகிறேன் என்று வெண்ணிலா போகப் போகிறார்.
தற்போது சாரதாவுக்கும் காவேரி விஜய் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை காவேரி கர்ப்பம் என்ற உண்மை தெரிந்து விடும். அதனால் காவேரி விஜயை சாரதா சேர்த்து வைத்து விடுவார். யமுனாவிற்கும் நவீன் செய்த விஷயங்கள் அனைத்தையும் தெரியும்படி வைத்து நவீன் மற்றும் காவிரியிடம் மன்னிப்பு கேட்டு யமுனா நவீனுடன் சேர்ந்து விடுவார்.
அந்த வகையில் எல்லா கதையும் ஒன்றாக கூடி வருவதால் முடிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இயக்குனர் பிரவீன் புதுசாக ஒரு நாடகத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார். அதாவது பிக் பாஸ் பிரபலமான அன்சிதா மற்றும் நீ நான் காதல் சீரியல் மூலம் அறிமுகமான ராகவும் இணைந்து நடிக்கப் போகும் சீரியலை இயக்குனர் பிரவீன் தான் இயக்கப் போகிறார். இதனால் இந்த சீரியல் வரும் பொழுது மகாநதி சீரியல் முடிவடைந்துவிடும்.