15 வருடம் கழித்து ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் சரவணன்.. சட்டமும் நீதியும் விமர்சனம்

Sattamum Needhiyum Review : நடிகர் சரவணன் 15 வருடங்களுக்குப் பிறகு ஹீரோவாக நடித்திருக்கும் வெப் தொடர் தான் சட்டமும் நீதியும். இதூ ஜி5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவருக்கு சட்டத்தை காட்டிலும் சரியான நீதி தான் கிடைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் படியாக அமைந்திருக்கிறது.

இதன் கதைகளும் சாதாரண நோட்டரியின் வாழ்க்கையை சுற்றியே அமைந்து இருக்கிறது. வெளியே புகார்களை அடித்துக் கொடுக்கும் சுந்தரமூர்த்தி கதாபாத்திரத்தில் சரவணன் நடித்திருக்கிறார். அவருக்கு அசிஸ்டெண்டாக நம்ரிதா நடித்துள்ளார்.

தனக்கே எந்த கேசும் இல்லை நீ ஏன் என்னுடன் சுத்துற என நிம்ரிதாவுக்கு வேறு வழக்கறிஞர்கள் இடம் சரவணன் சிபாரிசு செய்கிறார். ஆனால் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதை எடுத்து எதிர்பாராத விதமாக நீதிமன்ற வளாகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளித்து இறந்து விடுகிறார்.

சரவணனின் சட்டமும் நீதியும் வெப் சீரிஸின் விமர்சனம்

அந்த கேசை கையில் எடுக்கிறார் சரவணன். அதாவது வெண்ணிலா என்ற தனது மகளை காணவில்லை என்று போலீசாரிடம் வழக்கு கொடுக்கிறார் குப்புசாமி. ஆனால் அந்த வழக்கை விசாரிக்காமல் அவரை துரத்தி அடிக்கின்றனர். தன்னால் எதுவுமே செய்ய முடிய இயலாததால் தீ குளித்து விடுகிறார்.

இதற்காக சரவணன் வாதாடும் போது அந்த முதியவர் 40 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது மகள் 20 வருடத்திற்கு முன்பே காணாமல் போய்விடுகிறார் என்று அடுத்தடுத்த எபிசோடுகளில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகிறது.

கடைசியில் இந்த வழக்கில் சரவணன் ஜெயித்தாரா, குப்புசாமியின் மகள் கிடைத்தாரா என்பதுதான் சட்டமும் நீதியும் வெப் சீரிஸின் கிளைமேக்ஸ். சட்டம் நீதி ஆகியவற்றை ஒரு சாமானியன் பார்வையில் இயக்குனர் அணுகி இருப்பது புதுமையாக உள்ளது.

மேலும் உணர்ச்சிகரமான மற்றும் பரபரப்பான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சரவணன் மற்றும் ஒரு சிலரை தவிர புதுமுக நடிகர்கள் என்பதால் கதாபாத்திரங்களில் வளர்ச்சி முழுமையாக இடம்பெறவில்லை.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/5