உயிருக்கு போராடும் ரோகினி அம்மா, காப்பாற்றும் முத்து.. வெளிவரும் கல்யாணியின் சுயரூபம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதா வீட்டுக்கு விருந்துக்கு போன மீனா சீதாவின் மாமியாரும் கணவரும் அன்பாகவும் பாசமாகவும் மரியாதை கொடுத்து நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். வீட்டிற்கு கிளம்பிய நிலையில் மீனா சத்தியா மற்றும் அம்மாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக டிரஸ்களை வாங்கி கொடுத்து முறைப்படி அனுப்பி வைக்கிறார்கள்.

அப்படி கிளம்பும் பொழுது சத்யாவின் வேலை விஷயமாக முத்து தெரிந்தவரிடம் பேசி இருக்கிறார் என்று மீனா சொல்கிறார். உடனே அருண் பொறாமையில் சத்யாவிடம் எல்லா வேலைக்கும் போய் சேர்ந்து நேரத்தை வேஸ்ட் பண்ணாதே. உன்னுடைய குறிக்கோள் என்னவோ அதற்கு ஏற்ற மாதிரி வேலை தேடு என்று சொல்லி அருணுக்கு தெரிந்த நபரிடம் சத்யாவின் வேலை விஷயமாக பேசி வாங்கி கொடுப்பதற்கு தயாராகி விட்டார்.

இந்த விஷயத்தை எல்லாம் மீனா, முத்துவிடம் சொல்லி எனக்கு மாமியார் பாசம் என்பதை விட எங்க குடும்பத்தில் இருப்பவர்கள் இங்கு வந்து அவமானப்பட்டதை நினைக்கும் பொழுது தான் கஷ்டமாக இருக்கிறது என்ற பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். உடனே முத்து அடுத்த ஜென்மத்தில் எனக்கு ஒரு நல்ல அம்மாவும் உனக்கு ஒரு நல்ல மாமியாரும் கிடைக்கும் என்று ஆறுதல் படுத்துகிறார்.

அடுத்ததாக ரோகினி, நாரதர் வேலையை பார்க்கும் விதமாக நீத்துவின் ஹோட்டலுக்கு சென்று நீத்து மனசில் என்ன இருக்கு என்பதை வேவு பார்க்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் ரவியுடன் பேசும் விதமும், நீத்து ரவி மாதிரி ஒரு மாப்பிள்ளை வேண்டும் என்று சொன்னதை வைத்து நீத்து மனதில் ரவி இருக்கிறார் என்று ரோகிணி புரிந்துகொண்டு நடந்த விஷயத்தை ஸ்ருதி அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறார்.

இதனால் ரவி சுருதி வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக மீனா எல்லோருக்கும் காபி போட்டுக் கொடுக்கும் பொழுது விஜயாவுக்கும் எடுத்துட்டு வந்து கொடுக்கிறார். ஆனால் விஜயா எனக்கு காபி வேண்டாம் டீ போட்டு கொடு என்று வேலைக்காரி மாதிரி மீனாவை படுத்துகிறார். இதை பார்த்த முத்து உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் முன்னாடியே சொல்லி இருக்க வேண்டும்.

இப்பொழுது அவள் போட்டு வைத்த காபியை குடிங்க, அவள் ஒன்னும் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது. என்னுடைய மனைவி என்று சொல்லி மீனாவை சந்தோஷப்படுத்தி விட்டார். அடுத்ததாக முத்து சவாரிக்கு போகும் பொழுது ரோட்டில் ஒருவர் மயக்கம் போட்டு இருப்பதை பார்த்து முத்து காப்பாற்ற போகிறார். ஆனால் அது யார் என்றால் ரோகிணியின் அம்மா. பக்கத்தில் க்ரிஷ், பாட்டி பாட்டி என்று அழுது கொண்டே இருக்கிறார்.

உடனே முத்து தான் ரோகிணியின் அம்மாவை காப்பாற்றுவதற்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகிறார். கூடவே கிரிஷும் போவதால் இந்த முறை ரோகிணியின் சுயரூபம் முத்துவுக்கு தெரிய வந்துவிடும். தற்போது ரோகிணி தான் எல்லாமே என்று கண்மூடித்தனமாக நம்பும் மனோஜ்க்கு அடுத்து அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.