Jenma Natchathiram Movie Review: மணிவர்மன் இயக்கத்தில் தமன், மால்வி மல்கோத்ரா, காளி வெங்கட், முனீஷ்காந்த் நடிப்பில் ஜென்ம நட்சத்திரம் வெளியாகி உள்ளது. திகிலும் அமானுஷ்யமும் கலந்த இப்படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தின் மூலம் காண்போம்.
ஹீரோவின் மனைவிக்கு கனவில் அமானுஷ்யமான பல விஷயங்கள் வருகிறது. அப்போது ஒரு பழைய ஃபேக்டரியில் இருக்கும் பணத்தைத் தேடி ஹீரோ மனைவி மற்றும் நண்பர்கள் குழு உடன் அங்கு செல்கிறார்.
ஆனால் அங்கு எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கிறது. ஹீரோவின் மனைவி தன் கனவில் பார்த்த விஷயங்களை எல்லாம் அங்கு பார்க்கிறார். அதேபோல் அமானுஷ்யங்களால் ஒவ்வொருவரின் உயிரும் போகிறது.
ஜென்ம நட்சத்திரம் முழு விமர்சனம்
ஒரு கட்டத்தில் அங்கு சாத்தான் வழிபாடு நடப்பதை ஹீரோ கண்டுபிடிக்கிறார். இறுதியில் ஹீரோ தன்னுடன் வந்தவர்களை காப்பாற்றினாரா? அமானுஷ்யத்திற்கு முடிவு கிடைத்ததா? என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் பெயரை கேட்டதுமே பழைய ஜென்ம நட்சத்திரம் படம் நினைவுக்கு வரும். ஆனால் அதில் இருக்கும் திகிலும் திரில்லர் காட்சிகளும் இதில் கிடையாது. அது ஒரு பெரும் குறையாக இருக்கிறது.
ஹீரோ அமைதியான முகபாவத்துடன் தன்னுடைய கதாபாத்திரத்தை குறைவின்றி செய்திருக்கிறார். அதேபோல் மற்ற நடிகர்களும் கொடுத்த வேலையை முடிந்த அளவு சிறப்பாக செய்துள்ளனர்.
இருப்பினும் இயக்குனர் திரைக்கதையை ஆடியன்ஸ்க்கு சரியாக சொல்லவில்லை. பல காட்சிகள் கதையோடு ஒட்டாத தன்மையுடன் இருக்கிறது. பின்னணி இசை படம் பார்ப்பவர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது.
இறுதியில் அடுத்த பாகத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார் இயக்குனர். ஆனால் இந்த பாகமே பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை என்பதுதான் உண்மை.
சினிமா பேட்டை ரேட்டிங் : 2.75/5