TVK Vijay: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், இந்த ஒரு வருட காலத்தில் அவருடைய அடுத்தடுத்த நடவடிக்கைகள் எப்படி இருக்க போகிறது என்பதை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார்.
விஜய்யின் பக்கா ஸ்கெட்ச்
வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முழுக்க விஜய் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
ஜனவரியில் அவர் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் தொடங்கிய இரண்டு வருடங்கள் முடிய இருக்கிறது.
அதே மாதத்தில் தன்னுடைய கூட்டணி கட்சி யார் என்பதை அறிவித்து ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்த இருக்கிறார். மார்ச் மாதத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் விஜய் பேப்பர் மாதத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலை சந்திக்க இருக்கிறார்.