Sivakarthikeyan : விஜய் டிவியில் முதலில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி தமிழ் சினிமாவில் மெரினா படத்தில் அறிமுகமாகி பல ரசிகர்களின் கூட்டத்தை சேர்த்த நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் பல வருடங்களாக தொடர் ஹிட் படங்களை கொடுத்தாலும், அமரன் திரைப்படம் தான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்த திரைப்படமாகும். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் காம்போ திரையில் பயங்கரமான வரவேற்பை கொடுத்தது.
தற்போது உச்சநிலையை தொட்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பல இன்னல்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஒருவர் டாப் இடத்தை பிடித்தாலே அவருக்கு எதிரிகளும் கூடி விடுவார்கள். சிவகார்த்திகேயனுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும், அவரை தாழ்த்தி பேச சில சினிமா விமர்சகர்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
துப்பாக்கியை கொடுத்தது தப்பு..
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் 2026 திரைக்கு வர இருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜய்க்கு போட்டி போடும் வகையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஜனநாயகன் ரிலீஸான 2,3 நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
விஜய் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்தாலும், விஜயின் படத்தை விட சிவகார்த்திகேயன் படத்திற்கு தற்போது மவுஸ் அதிகமாகி விட்டது. சிவகார்த்திகேயனின் படம் தான் முதல் வெற்றியை கொடுக்கும் என மக்கள் மத்தியில் இது பேசும் பொருளாக இருக்கிறது.
இந்நிலையில் கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு விஜய் துப்பாக்கியை கொடுத்தார். ஆனால் தற்போது விஜய் விட சிவகார்த்திகேயனுக்கு தான் மார்க்கெட் அதிகம். “ஏண்டா கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கி கொடுத்தோம்னு விஜய் ஃபீல் பண்ணுவாரு “.