காந்தாரா 2 ஷூட்டிங்கில் தொடரும் சிக்கல்கள்.. படப்பிடிப்பு தொடருமா? இல்லையா?

2022-ல் வெளியாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாராட்டை பெற்ற திரைப்படம் காந்தாரா, துளு மக்களின் பூத கோலா மற்றும் பஞ்சுருளி தெய்வத்தை மையமாக கொண்டது.

ரிஷப் ஷெட்டி இயக்கியும், கதாநாயகனாகவும் இருந்த இந்த படம் உலகளவில் ₹400 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. இதனையடுத்து, இரண்டாம் பாகம் காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில் 2023 நவம்பரில் தொடங்கப்பட்டது.

இந்த படத்தின் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் இருக்கும் ரிஷப் ஷெட்டி, பண்டைய தெய்வத்தின் வரலாறு மற்றும் அதன் தாக்கத்தை கதையாக சொல்ல முயலுகிறார். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து பல விபத்துகள் தொடர்ந்துவருகிறது. இது ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024 நவம்பரில், படக்குழுவினர் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது. அதில் ஆறு பேர் காயம் அடைந்தாலும், யாருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஆனால், கபில் என்ற தொழில்நுட்ப கலைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்தது.

படப்பிடிப்பு தொடருமா? இல்லையா?

அதனுடைய பின்னர், நகைச்சுவை நடிகர் ராகேஷ் மற்றும் நடிகை விஜி இருவரும் மாரடைப்பால் உயிரிழந்தது படத்திற்குள் நிலவிய நிம்மதியை சிதறடித்தது. இவ்வளவு சம்பவங்களுக்கு பிறகு தற்போது சிவமோகா மாவட்டம் மணி நீர்த்தேக்கத்தில் படக்குழுவினர் சென்ற படகு கவிழ்ந்தது. அதில் அனைவரும் மீட்கப்பட்டாலும், தொழில்நுட்ப கருவிகள் சேதமடைந்தன.

இந்த அசம்பாவிதங்கள் பலரிடையே சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. சிலர் இது வெறும் தற்செயலான விபத்துகளே என்று நம்பினாலும், மற்றவர்கள் பஞ்சுருளி தெய்வத்தின் எச்சரிக்கையாகவே இதைக் கருதுகிறார்கள். தெய்வத்தின் கோபத்தை கட்டுப்படுத்தாமல் படம் எடுக்க முயற்சிப்பது அவமதிப்பாகும் எனவும் கூறப்படுகின்றது.

என்னதான் விமர்சனங்கள் வந்தாலும், ரிஷப் ஷெட்டி தனது திட்டத்தில் உறுதியாக இருக்கிறார். தெய்வத்தின் ஆழமான வரலாற்றையும், அதன் நம்பிக்கைகளையும் உலகிற்கு காட்ட விரும்பும் அவர், எந்த தடையும் பயப்படாமல் படப்பிடிப்பை தொடர்கிறார். இந்த படம் வெற்றி பெறுமா? தெய்வத்தின் கோபம் தணிவதா? என்பது மட்டுமே எதிர்காலம் சொல்லும்.